Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, May 9, 2020

ஏற்படும் விபத்தில் இருந்து பாதுகாருங்கள்-புத்தளம் நகர சபையின் கவனத்திற்கு

புத்தளம் நகர சபை பிரிவில் வெட்டுக்குளம் பகுதியில் முன்னாள் நகர சபை உறுப்பினர் சகோதரர் ஜலீல் அவர்களின் வீட்டுக்கு  அருகில் செல்லும் பாதையின் முடியும் பகுதியில் இடைமறித்து செல்லும் வடிகான் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.


இன்றைய தினம் அந்த பகுதியால் வரக் கிடைத்த போது,அப்பகுதியில் இருவர் சென்றுகொண்டிருந்தனர்.அவரக்ளுக்கு இடம் கொடுத்து எனது மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்ட போது இறைவனின் உதவியால் அந்த வடிகானில் விழுவதில் இருந்து பாதுகாப்பு பெற்றேன்.இல்லதவிடத்து சேதங்களை சந்திக்க நேரிட்டு இருக்கும்.
இதற்கு முன்னர் எத்தனை பேர்கள் இந்த விபத்துக்குள்ளாகியிருப்பார் என்று தெரியாது.
எது எவ்வாறாக இருந்தாலும் புத்தளம் நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் உடடினயாக இது தொடர்பில் மக்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவார்கள் என இந்த வேண்டுகோளினை அவர்களது கவனத்திற்கு முன் வைக்கின்றேன்.

இன்று வருககைத்தந்த போது அப்பகுதியில் கிடந்த ஒரு மரப்பலகையினையும்,ஒரு சிறிய கொப்பினையும் மற்றவர்கள் அவதானத்துடன் இருக்கும் வகையில் வைத்துவிட்டுவந்தேன்.

No comments:

Post a Comment