அத்தியாவசிய பயணங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என ஐக்கிய அரபு இராச்சியம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம் தமது நாட்டு பிரஜைகளை கேட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையும், கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையும் கருத்திற் கொண்டே இந்த பயண எச்சரிக்கையை அந்த நாடு விடுத்துள்ளது.
No comments:
Post a Comment