உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், சிறு சிறு குற்றங்கள் தொடர்பில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள, சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி, பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் நேற்று (19) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றப் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment