முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய, அவரது புதல்வர் யோசித்த ராஜபக்ஷ கடற்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மார்ச் 9ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதமே இவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.