Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, January 5, 2015

மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு

மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவுஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை நீதவான் ட்ரொஸ்கி, பண்டாரவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 


எல்ல - நியூபேர்க் தோட்டத்தில் வாக்காளர் அட்டை மற்றும் தபால் விநியோகத்தில் ஈடுபட்டு திரும்பிக் கொண்டிருந்த தபால் ஊழியரான பெரியசாமி ஞானசேகரன் மீது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தாக்குதல் நடத்தினார். 

தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஞானசேகரன் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இன்று காலை அத தெரண தமிழிணையத்திற்கு தொலைபேசியில் பேசிய ஞானசேகரன் தனக்கு இன்னும் வருத்தம் இருப்பதாகவும் அமைச்சர் அடித்தபோது அவருடைய பெரிய மோதிரம் பட்டு வாய் மற்றும் மூக்கில் இரத்தம் வந்ததாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. எல்ல பொலிஸார் விசாரணை நடத்தி இன்றைய தினம் நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்ததை அடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.