Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, December 11, 2014

JUH உதய கம்மன்பில மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்தார்!

ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமாகிய உதய கம்மன்பில எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆரதவு வழங்கத் தீர்மானித்துள்ளார். 

அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கான தனது ஆதரவை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார். 

தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருந்து விலகி மைத்திரிபாலவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கடந்த வாரங்களில் தனது மாகாண சபை அமைச்சு பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்தை விமர்சித்த உதயகம்மன்பில இன்று திடீரென மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார். 

ஊடக சந்திப்பில் கம்மன்பில உரையாற்றுகையில், 

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒரு வாக்குறுதியையும் ஜாதிக ஹெல உறுமயவிடம் ஒரு வாக்குறுதியையும் கண்டி தலதா மாளிகைக்கு முன் ஒரு வாக்குறுதியையும் அளித்துள்ளார். 

JUH உதய கம்மன்பில மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்தார்!ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்காவுடம் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம். நாட்டில் நல்லாட்சி குறித்த பிரச்சினை உள்ளது. ஹெல உறுமய அதனால் அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்தது. ஆனால் எதிரணியில் இணைந்து கொண்டது. 

நான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தேன். கட்சியின் உயர் பீடத்திற்கு இதுகுறித்து அறிவித்தேன். ஆனால் எனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதனால் நேற்று ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளருக்கு எனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினேன். 

ரணில், சந்திரிக்கா கூட்டு உடைந்த எதிர்கட்சி பஸ்ஸை சரிசெய்து அதில் நல்லாட்சி என்ற பதாகை போடப்பட்டுள்ளது. அதில் ஜாதிக ஹெல உறுமய ஏறியுள்ளது. நாளை ரணில், சந்திரிக்கா, மங்கள கூட்டு நல்லாட்சி பாதாகையை அகற்றி தமிழீழம் என்ற பதாகையை இடும்போது ஹெல உறுமயவிற்கு அங்கிருந்து வெளியேற நேரிடும். 

நான் இனி ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளர் அல்ல. அப்பதவியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளேன். இரண்டு நாட்கள் நித்திரையின்றி சிந்தித்து மனக்கவலையுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன்.´ 

இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார்.