Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, December 22, 2014

திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது - கபீர் ஹசிம்


திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது - கபீர் ஹசிம்ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று வெளியிட்ட உடன்படிக்கை தொடர்பான ஆவணம் போலியானதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். 

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 


அரசாங்கம் ஒரு உடன்படிக்கையை தயாரித்து அதனை இரகசிய உடன்படிக்கை என கூறுவதாக கபீர் ஹசிம் கூறினார். 

அரசாங்கம் போலியான ஆவணத்தை தயாரித்துள்ளதாகவும் அதில் உள்ள கையெழுத்தும் போலியானதெனவும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.