Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, December 16, 2014

12.13.14 அன்று போட்டி போட்டிக் கொண்டு திருமணம் செய்த அமெரிக்க ஜோடிகள்

12.13.14 அன்று போட்டி போட்டிக் கொண்டு திருமணம் செய்த அமெரிக்க ஜோடிகள்கடந்த 13ம் தேதி அமெரிக்காவில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் செய்வோர் தங்களது திருமண நாள், ஆண்டு ஆகியவை தங்களுக்கு பிடித்த எண்ணில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் 7.7.07, 6.07.08, 8.8.08, 7.08.09, 8.09.10, 9.10.11, 10.11.12, 11.12.13 ஆகிய தேதிகளில் உலகம் முழுவதும் ஏராளமான காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி அமெரிக்காவில் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்துள்ளனர். அதாவது 12.13.14 என்ற அந்த எண் மீண்டும் வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜோடிகள் அடித்துப் பிடித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜானதன் மில்லர் மற்றும் அமாண்டா பெல்சர் ஆகியோரும் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து பெல்சர் கூறுகையில், கூல் நம்பர்கள் ஒன்றாக வரும் தேதிகளில் திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் செய்து கொண்ட என் நண்பர்களை பார்த்து நான் பொறாமைப்பட்டுள்ளேன். இந்நிலையில் தான் என் திருமணம் 12.13.14 என்ற தேதியில் நடந்துள்ளது என்றார்