Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, November 8, 2014

கட்டார் கிளை மகிழ்ச்சியடைகின்றது.

                              
தேசிய தலைவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கொழும்பு
இலங்கை
2014.11.08
                                                     வாழ்த்துச் செய்தி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று சர்வதேசத்தில் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளமை பாராட்டுக்குரியது.இலங்கைக்குள் மட்டுமல்லாது மத்திய கிழக்கிலும்.அதே போன்று மேற்கத்தைய நாடுகளிலும் வாழும் இலங்கையர்களின் நலன் பேனும் வகையில் தமது கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்க ஆரம்பித்துள்ளது பாராட்டுக்குரியது.

கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் அண்மையில் கட்டாருக்கு வருகைத்தந்து கட்சியின் கட்டார் கிளையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன்.சர்வதேசத்திற்கான முதலாவது கிளையாக இதனை அடையாளப்படுத்தியமை கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு கிடைத்த பெரும் அரசியல் அங்கீகாரமாகும்.
தற்போது ஆரம்பித்து வைத்துள்ள பிரான்ஸ் நாட்டின் எமது  கட்சியின் செயற்பாடுகள் வெற்றியளிக்க எமது பிரார்த்தனைகளையும்.வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் கட்டார் கிளை மகிழ்ச்சியடைகின்றது.

தலைவர்

முஹம்மது பஷீர்