Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, November 20, 2014

மூன்றாவது முறையாக அதிபராகிறார் ராஜபக் ஷே?

கொழும்பு:இலங்கையில், 2005 மற்றும் 2010ல் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் வெற்றி பெற்று, அதிபராக இருப்பவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவர் ராஜபக் ஷே இவரின் பதவிக் காலத்தில் தான், 2009ல், விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர். இதனால், இவரின் புகழ், அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து இருந்தது.


இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில், அதிபரின் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்தது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது, 2016ல் நடைபெற வேண்டிய அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, அதிபராக தொடர ராஜபக் ஷே முடிவு செய்தார்.ஆனால், அந்நாட்டின் சட்டத்தில் அதற்கு இடமில்லை. இதனால், ஆதரவாளர்களை வைத்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த முன்வந்துள்ளார். 'தொடர்ந்து நான்காண்டுகள் பதவியில் இருக்கும் அதிபர், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கலாம்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, அதிபர் தேர்தல் அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், இலங்கையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபரானவர் என்ற பெருமையை ராஜபக் ஷே பெறுவார். இவரின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர்க்கட்சிகள், அதிபர் தேர்தல் வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளன.
இக்கட்டான நேரத்தில்...கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அதிபரின், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, 20 சதவீத வாக்காளர்களை இழந்தது. அதன் ஒரு முக்கிய கூட்டணி கட்சியான, ஜே.எச்.யு., நேற்று முன்தினம் அரசில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அந்த கட்சி, புத்த மத துறவிகளைக் கொண்டது. அவர்கள் ஆதரவுடன் தான் முந்தைய தேர்தல்களில் வெற்றிக்கனியை பறித்த ராஜபக் ஷே, இந்த தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.