பல நாடுகளில், தற்போது கனடாவிலும் கூட, அதிகரித்துவரும் தீவிரவாத
நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த அச்சுறுத்தலுக்கெதிராகப் போரிடுவதற்கு அனைவரும் சரிசமமான பங்குதாரர்களாக ஒன்றுகூட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
கனடாவில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று புகுந்து தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். தலைநகர் ஒட்டவாவில் நடைபெற்ற இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.