இந்தியாவில் முதன்முறையாக ஹலால் முறையில்
தயாரிக்கப்பட்ட ஒப்பனைப் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்கின்ற நிறுவனம்
தனது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது. உலகில் அதிக முஸ்லிம்களைக் கொண்ட
நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள இந்தியாவில் ஹலால் ஒப்பனைப்
பொருட்களுக்கான சந்தை பெரிய அளவில் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.