Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, September 11, 2014

'பச்சைமிளகாய் சவால்' விடுக்கும் புத்திக எம்.பி

இலங்கை நிதியை வெளிநாடுகள் பெற்றுக்கொள்ளும் பிரமீட் வேலைத்திட்டங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு உதவுவதற்காக நிதி சேகரிக்கும் வகையிலும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பச்சைமிளகாய் சவாலை எதிர்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண, அழைப்பு விடுத்துள்ளார்.


மூன்று பச்சைமிளகாய்களை 2 நிமிடத்துக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்பதே இந்த சவாலாகும். இந்த சவாலை இன்று எதிர்கொண்டு மூன்று பச்சை மிளகாய்களை சாப்பிட்ட புத்திக எம்.பி, இந்த சவாலை எதிர்கொள்ளுமாறு மேலும் ஐவருக்கு அழைப்பு விடுத்தார்.

கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும, மேல் மாகாணசபை உறுப்பினர் அநுர தீபால், ஊடகவியலாளர் சமன் பிரியங்கர, கலைஞர் காவிந்த பெரேரா ஆகியோருக்கு புத்திக எம்.பி சவால் விடுத்துள்ளார்.