உலகில் கூடுதலான காலம் உயிர் வாழ்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நோர்மன்
கோர்டன் தனது 103ஆவது வயதில் காலமாகியுள்ளார். 100 வயது வரை வாழ்ந்த
முதலாவது கிரிக்கெட் வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆபிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளரான இவர் 6 மாதங்களில் தென்
ஆபிரிக்கா அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து
அணியுடன் நடைபெற்ற 5 போட்டிகள் அடங்கிய ஒரு டெஸ்ட் தொடர் மாத்திரமே இவர்
விளையாடிய சர்வதேசப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் 20 விக்கெட்களை
வீழ்த்தியுள்ளார் கோடன். 16 வருடங்களில் கோர்டன் 29 முதற் தரப்போட்டிகளில்
விளையாடி 126 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
உலக மகா யுத்தம் காரணமாகவே இவரின் கிரிக்கெட் வாழ்வு குறுகிய காலத்தில் நிறைவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது.