Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, March 4, 2014

ஜனாதிபதி சட்டரீதியாக அறிவித்தால் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுவோம்! - முஸ்லிம் காங்கிரஸ்

தமது கட்சி ஆளுங்கட்சியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சட்ட ரீதியாக அறிவித்தால், விலகிச் செல்வதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி இதுதொடர்பில் குறிப்பிடும்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில இனவாதக் கட்சிகள் தேவையற்ற விடயங்களை குறிப்பிட்டு வருவதால், முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய தப்பான கண்ணோட்டம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நவநீதன் பிள்ளை வருகை தந்தவேளை, அவரிடம் முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் தொடர்பிலான விடயங்கள் உள்ளடங்கலாக கையளிக்கப்பட்ட மனுவில் உள்ளவை அனைத்தும் உண்மையானவையே என்றும், அதுதொடர்பில் இணையத்தில் பல விடயங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைக்கு கையளிக்கப்பட்ட மனு அரசாங்கத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது என்று உறுதியாக ஹஸன் அலி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment