நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும், அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடிந்தகரையில் உதயகுமார் தலைமையில் புஷ்பராயன், ராஜலிங்கம் உள்ளிட்ட 11 பேர் கடந்த 31-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இன்று 5-வது நாளாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால், அவர்களின் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. மேலும் உண்ணாவிரதம் இருந்த 4 பேரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
மீனவர் அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக உதயகுமார் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட போராட்ட வழிமுறைகள் குறித்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (09.02.2014) மூன்று மாவட்ட சமுதாயக் கூட்டம் கூட்டப்புளி கிராமத்தில் கூடி முடிவெடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

No comments:
Post a Comment