உலகில் மிகப்பெரிய நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளே இதுவரை வெற்றிகரமாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி, பின்னர் அது முறையாக அங்கு கால்பதித்தவுடன் அங்குள்ள சூழ்நிலையை ஆய்வு செய்து வருகின்றன.
இந்தியாவும் கூட கடந்த 2008 ஆம் சந்திராயன் 1 என்ற நிலவை ஆராயும் ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த வரிசையில் இஸ்ரேலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. வாஷிங் மெஷின் போன்ற தோற்றம் கொண்ட இஸ்ரேலின் இந்த விண்கலம் 121 கிலோ எடை கொண்டது.
கடந்த 2010-ம் ஆண்டு இஸ்ரேலில் உள்ள மதுபான பாரில் இந்த விண்கலத்தை வடிவமைக்க நாசாவை சேர்ந்த முன்னாள் பொறியாளரான யோனாடன் வைன்ட்ராப் மற்றும் அவரது நண்பர்கள் முடிவு செய்தனர். பின்னர் தங்களின் இக்கனவு திட்டம் குறித்து முகநூலில் அறிவித்தனர். தற்போது அக்கனவு நனவாகி இப்பணியில் 20 நிரந்தரமான ஊழியர்களும் 250 தன்னார்வலர்களும் ஈடுபட்டு 36 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்கலத்தை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து வைன்ட்ராப் கூறுகையில், நிலவில் இஸ்ரேல் கொடி பறப்பது தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். 2016-ல் நிலவுக்கு இந்தியா அனுப்ப சந்தியராயன்-2 செயற்கை கோளில் தங்களது விண்கலத்தை அனுப்ப முடிவு செய்துள்ள அந்நாடு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்துடன் தனது பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment