கடவுள் அன்பை விரும்புபவன்,அன்பு
செலுத்தும் இடத்தில் கடவுளை காணலாம்.அதே போல் நாம் கடவுளுக்கு அன்பு செலுத்தினால் தான்
மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.அதே
வேளை இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ள மண்ணின் மைந்தனும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்
அவர்களின் வருகையும் பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
தேசிய மொழிகள்
மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினதும்,மன்னார் மாவட்ட செயலகத்தின் பங்களிப்புடனும்
மன்னார் புனித செபஸ்தியன் தேவாலய முன்றலில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மன்னார் மாவட்ட
செயலாளர் தேசப்பரிய தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசுகையில் கூறியதாவது –
ஒவ்வொரு மதமும்,இன
ஒற்றுமையினை எடுத்துக் கூறுகின்றது.விட்டுக் கொடுப்பும்,புரிந்துணர்வுமே எமக்கு தேவையாகவுள்ளது.அதனை
ஏற்படுத்தி கொள்ள இந்த நிகழ்வு ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன்
கூறினார்.
No comments:
Post a Comment