கால் நடைகளை அறுப்பது பிழையானது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.ஆர். மித்ரபால தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள கால்நடை அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில், இன்று வீடுகளில் அதிகமாக பசு மாடுகளையே வளர்க்கின்றனர்.ஆண் மாடுகளை, காளை மாடுகளை வீட்டில் வளர்ப்பதற்கு எவரும் விரும்புவதில்லை.இதனால் கட்டாக்காலிகளாக காளை மாடு வீதிகளில் திரிகின்றன. இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதனால் காளை மாடுகளை அறுப்பது தவறில்லை,அது காலத்தின் கட்டாயமாகும்.

No comments:
Post a Comment