Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, June 24, 2013

இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்: பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர்

இலங்கையில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் எம்.சுபியுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அதுவே பங்களாதேஷ் அரசாங்கத்தின் எண்ணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் இன்று திங்கட்கிழமை மாலை யாழ் வணிகர் கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் தலைமையிலான குழுவினருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


பங்காளதேஷில் இன, மத சுதந்திரம் பூரணமாக இருப்பதாகவும் இன,  மதங்களுக்கு இடையில் பாகுபாடின்றி இப்பதாகவும் அரச திணைக்களங்களில் 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்துக்கள் கடமையாற்றி வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் போருக்குப் பின்னர் இனஇ மத சுதந்திரத்தினை எதிர்பார்ப்பதுடன் இன நல்லிணக்கத்தினையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றதாகவும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இதேவேளை,  பங்களாதேஷ் இன நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் அத்துடன்  வேற்றுமையை அகற்றி சமரசமான முன்னேற்றத்தினை எதிர்பார்ப்பதுடன் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் வரவேண்டும் என்பதில் அதிக விரும்பம் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment