கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடகவியலாளர் உட்பட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலிக் கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் மற்றும் 6 பெண்கள் உட்பட 15 பேர் நேற்;று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment