இலங்கையில்
முஸ்லிம் வாழ்கின்றார்கள்,அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் இன்று
சகல தரப்பினரினதும்,பார்வை நீண்டு சென்றுள்ளது.அண்மையக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு
எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத சிந்தனை மாற்றும் நேரடித் தாக்குதல்கள் ஓய்ந்தப்பாடில்லை.
முஸ்லிம்களின்
பொருளாதாரத்தை இலக்கு வைத்து மேற்கொள்ப்படும் பொதுபலசேனா போன்ற அமைப்பின் செயற்பாடுகள்
ஒரு புறமிருக்க,முஸ்லிம்கள் என்றபடியால் மட்டும் அவர்களது மீள்குடியேற்றத்தை தடுக்கும்
காரியங்களும் திட்டமிடப்பட்ட முறையில் இடம் பெறுகின்றது.
அண்மையக்
காலமாக இதனது வேகமும்,வீரியமும் அதி வேகமாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது.குறிப்பாக
சமாதானச் சூழல் ஏற்பட்டுள்ள இந்த நிலையிலும் சமாதானமாக வாழ முடியாத நிலைக்கு முஸ்லிம்கள்
ஆற்கொள்ளப்பட்டுள்ளதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு
புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்று இரண்டாங்கெட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்
என்பது தான் உண்மையாகும்.அதற்கு அம்மக்களது முஸ்லிம் அரசியல் தலைமைகளையோ,அரசாங்கத்தையோ
குறை கூற முடியாது.அவர்கள் முஸ்லிம்களின் தேவைகளை பெற்றுக் கொடுக்க முனைகின்ற போது,அதற்கு
எதிராக இன்று கிளர்ந்தெழுபவர்கள்,தமிழர்கள் என்பதால் அதனை மிகவும் கட்சிதமாக கையாள
வேண்டியுள்ளது என்பது தான் உண்மை.
இந்த
நிலையில் இன்று வன்னி மாவட்டத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட புதிய தமிழ் கிராமங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.அவைகள் சட்ட ரீதியானவைகளல்ல,அன்றை புலிகளின் அதிகாரங்களுடன் ஏற்படுத்தப்பட்டதொன்று
என்பதை யாரும் அறிவார்கள்.அதனால் அந்த கிராமங்களை அழிக்க வேண்டும் என்று யாரும் முயற்சிக்க
வில்லை.இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேற வருகின்ற போது,தமிழ் தேசியம்
அதற்கு எரிராகவும்,இன ரீதியான வகையில் அதனை தடுக்க எடுத்துவரும் பிரயத்தனங்கள் ஏராளம்.
இலங்கையில்
முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து பாராளுமுன்ற உறுப்பினர் சம்பந்தன் ஆய்யா போன்ற தலைவர்கள்,ஆற்றும்
உரைகள் காலத்தறிகு பொருத்தமானதாக இருந்தாலும் அதில் உயிரோட்டங்கள் இல்லை என்பது தான்
உண்மை,தமது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் முஸ்லிம் எதிர்ப்பு பிரிவை தயார்படுத்தி
அதனை செயற்படுத்த துாபமிட்டுவிட்டு” உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு நாவால் வேறு
விதமான கருத்துக்களை வெளியிடும் பஞ்சோந்தி தனமாக அரசியல் நகர்த்தலை செய்வதை மீண்டும்
சம்பந்தன் அய்யா அவர்கள் ஆரம்பித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு
பிரச்சினையிருக்கின்றது.இது இன்று நேற்று உரித்தானதொன்றால்ல,அன்று புலிகள் முஸ்லிம்களை
வெளியேற்றிய போது,புலிகளின் வளரச்சிக்கு உறுதுனை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு,அதனை
தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.அதனை
செய்யாத இவர்கள் இன்று ஆடு நனைகின்றது ஓனாய் அழுத கதை என்ற நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளதுடன்,குழம்பிய
அரசியலை செய்ய முனைகின்றனர்.முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகின்றது தமிழ் தேசிய
கூட்டபை்பு உதவி வாருங்கள் என்று முஸ்லிம்களோ,அல்லது தலைமைகயோ அழைக்கவில்லை,அவ்வாறு
அழைக்கப்போவதுமில்லை,உண்மையான எதிரியினை நம்பலாம்,நன்பணைப் போன்று நடிக்கும் துரோகியினை
நம்ப முடியாது.
எது
எவ்வாறாக இருந்தாலும் சம்பந்தன் அய்யாவின் முஸ்லிம் சார்பு உரை என்பது இந்த காலத்தில்
பொருத்தமற்ற பேச்சாகும்,வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமுன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன்,வினோ நோகதாரலிங்கம்.சிவசக்தி ஆனந்தன்
ஆகியோர் மேற்கொள்ளும் அநியாயங்கள் எல்லைக்கடந்து போயுள்ளது.இதனை தடுத்து நிறுத்தி புலிகளால்
விரட்டப்பட்ட முஸ்லி்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் சம்பந்தன் அய்யாவின்
உரை அமைந்திருக்குமெனில் அது தான் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாகும்.
இலங்கைக்கு
வருகைத்தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினரை திருப்தி படுத்தும வகையில் இந்த உரை
அமைந்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment