Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, April 11, 2013

40 வருடங்களாக தூங்காமல் இருக்கும் விசித்திர மனிதர்

Thai Ngoc(70) என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த நபர40 வருடங்களாக தூங்காமல் வாழ்ந்து வருகிறார். கடந்த 1973ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட ஒருவகை காய்ச்சலுக்கு பின்பு இவரால் நித்திரை கொள்ள முடியவில்லை.
இந்த விசித்திர மனிதர் நாள்தோறும் 50 கிலோ கிராம் எடையுள்ள பொருட்களை 4 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு எடுத்துச் செல்கிறார். எனினும் இவரின் தூக்கமற்ற நிலையால் இவருக்கு எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படவில்லை.


தனது 6 பிள்ளைகளுடன் விவசாயம் செய்துவரும் இவர் இரவு நேரங்களை தனது தோட்டங்களை திருடர்களிடம் இருந்து பாதுப்பதில் செலவளித்துவருகிறார். சாதாரண மனிதர்களால் இப்படி நித்திரை இல்லாமல் வாழமுடியாது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் டொனி ரைட் (Tony Wright) என்ற நபர் 266 மணி நேரம் தொடர்சியாக தூங்காமல் இருந்து கின்னஸ் சாதனை புரிந்திருந்தார். அதற்கு மேல் அவரைத் தூங்காமல் இருப்பதற்கு அனுமதிக்கபடவில்லை. காரணம் அவரின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியிருந்தது. சாதனையின் பின்பு அம்மனிதனர் இரண்டு நாட்களுக்கு அவரின் தூக்கம் 15 மணி நேரங்கள் நீடித்ததாம்.
சாதாரன ஒரு மனிதனால் 11 நாட்கள் தூங்காமல் இருப்பதே சாதனையாக இருக்கும் போது, 40 வருடங்கள் தூங்காமல் இருக்கும் Thai Ngoc ஒரு விசித்திர மனிதரே.


No comments:

Post a Comment