Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, April 13, 2013

2 கோடி ரூபா நட்டம்: உதயன் ஆசிரியர் முறைப்பாடு


உதயன் பத்திரிகை மீதான தாக்குதலில் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்தார்.
\

யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் பத்திரிகை அச்சிடும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி தாரர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில், தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்யும் போதே, இத்தாக்குதலினால், தமது நிறுவனத்திற்கு  2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment