Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, April 11, 2013

19 இந்திய மீனவர்களும் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட பதில் நீதவான் முஹமட் சபூர்தீன் விடுதலை செய்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உத்தரவுக்கு அமைய,  இந்த 19 மீனவர்களையும் இன்றுவியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் மாவட்ட பதில் நீதவான் முஹமட் சபூர்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இவர்களை விடுதலை செய்துள்ளார்.


இந்த மீனவர்களின் 4 ரோலர் படகுகளையும் மீனவர்களிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த 19 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்றையதினமே  இந்த 19 இந்திய மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலி;ல் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் கால்நடைகள் மற்றும் சமூக அபிவிருத்தி  அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், மேல் மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரின்  பணிப்புரைக்கு அமைய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராம், எம்.ரமேஸ், ஜனாதிபதியின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாகச் செயலாளர் வீ.ஜீவானந்தம் ஆகியோர் மன்னார் நீதிமன்றத்திற்கு வருகை தந்து 19 இந்திய மீனவர்களையும் பார்வையிட்டதுடன், இவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் தலைமன்னார் கடற்படையினரின் உதவியுடன்  கடல் மார்க்கமாக இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முஹமட் ஜெமில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment