Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, March 27, 2013

இலங்கைதூதர் மின்னஞ்லால் தேசிய அளவில் சர்ச்சை


 

ஈழத்தமிழர் பிரச்சனையை திசை திருப்பும் விதமாக இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் நடத்திவரும் பொய் பிரசாரத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கையில் வசிக்கும் 75 சதவீத சிங்களவர்கள் ஒடிசா மற்றும் வடஇந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என்று கரியவாஸம் கூறிவருகிறார்.


அவர்களை பற்றி கவலைப்படாமல் 12 சதவீதமே உள்ள தமிழர்களின் உரிமைகளை பற்றி இந்தியா அக்கறை கொள்வது ஏன் என்று அவர் வடஇந்திய ஊடகங்களுக்கும், தலைவார்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். தூதரக உறவுகளுக்கு முரண்பாடாக செயல்பட்டுள்ள கரியவாஸத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைகளை கரியவாஸம் அவப்போது எழுப்புவதால் அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கரியவாஸத்தின் சர்சைக்குரிய மின்னஞ்ல் டெல்லி ஊடக வட்டாரங்களில் வேகமாக பரவி வருகிறது. இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் எழுந்துள்ள ஒருமித்த போராட்ட உணர்வு தேசிய அளவில் பலன்களை தர துவங்கியுள்ளது. இந்நிலையில் கரியவாஸத்தின் திட்டமிட்ட இந்த பிரச்சாரம் எதிர்மறை விளைவுகளை உருவாக்குவதற்கான திட்டாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment