முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் ஏன் மௌனமாகவே உள்ளது : அசாத் சாலி
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு
போகின்ற நிலையில் அரசாங்கமும் அரசில் உள்ள அமைச்சர்களும் ஏன் வாய்மூடி
மௌனிகளாக உள்ளனரென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி
கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுபல
சேனா என்றொரு அமைப்பு நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக
குர் ஆனை ஆதாரம் காட்டி அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றது. இது
தொடர்பில் அரசாங்கமோ அல்லது அரசியல்வாதிகளோ எதுவித நடவடிக்கைகளையும்
எடுத்ததாக தெரியவில்லை.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால்
கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக 8 முஸ்லிம் நாடுகள்
வாக்களித்துள்ளன. பௌத்த மதத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு
மகாநாயக்க தேரர்களும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது.
அரசாங்கதிற்குள்ளேயே பல முரண்பாடுகள் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment