முல்லைத்தீவு
மாவட்டத்தில் தமிழ் மக்களது பூர்வீக காணிகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் அபகரித்து,அந்த
காணிகளில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கையெடுப்பதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து
அமைச்சின் ஊடக ஆலோசகர் இர்ஷாத் றஹ்மத்துல்லா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
வடக்கில்
1990 ஆம் வாழந்த முஸ்லிம்கள் தமது பூர்வீக பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக புலிகளினால்
வெளியேற்றப்பட்ட போதும்,அங்கு முஸ்லிம் செறிவாக வாழ்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களை
தமிழ் மக்களுக்கு புலிகளினால் அன்று பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
சமாதான
சூழல் ஏற்பட்ட பிறகு முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த சொந்த மண்ணுக்கு சென்ற போது முஸ்லிம்கள்.
வாழ்ந்த கிராமங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றம் பெற்று தமிழ் சகோதரர்கள் அதில்
குடியமரந்துள்ளதையும் காணமுடிந்தது.அதே போல் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள்,மத்ரஸாக்கல்
சேதமாக்கப்பட்டும்,முஸ்லிம் பெயரினை கொண்டிருந்த பாடசாலையின் பெயர்கள் எவ்வித அனுமதியுமின்றி
தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான
சூழலில் முல்லை மாவட்ட முஸ்லிம்கள் வாழ்வதற்காக தமிழ் மக்களின் காணிகளையோ,தமிழர்கள்
தற்போது வைத்துள்ள முஸ்லிம்களது காணிகளையோ,பலவந்தமாக மீட்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும்
எடுக்கவில்லை.வன்னி மாவட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவு
செய்யப்பட்டு,அம்மக்களின் விமேசானத்திற்காக பணியாற்றிவரும்,மாவட்ட அபிவிருத்தி குழுவின்
தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் இம் மாவட்ட மக்களுக்கு ஆற்றியுள்ள பணிகள்
வரலாற்று பதிவாகும்.
இங்கு
வாழ்ந்த தமிழ் –முஸ்லிம்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதில் அமைச்சர் றிசாத் பதியுதீன்
மிகவும் உறுதியாக செயற்பட்டுவருகின்றார்.அரசிலுக்காக எதனையும் செய்யும் அரசியல் வாதியாக
அல்லாமல்,பாதிக்கப்பட்ட மற்றும் தேவையுணர்ந்த மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதில்
முன்னின்று செயற்படும் ஒருவர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்வாறு
மக்களுக்கு அரும்பணியாற்றும் அமைச்சர் மீது அபாண்டங்களை சுமத்துவது நாகரிகமற்ற செயலாகும்.
முல்லைத்தீவில்
தமிழ் மக்களது காணிகளை அபகரிப்பதாக கூறுபவர்கள்,அதற்கான சரியான ஆதராங்களை கொண்டுவந்து
அதனை நிரூபிக்க வேண்டும்.முல்லை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உண்மைத் தன்மையினை
தெளிவபடுத்தி ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளதையும் பார்க்க வேண்டும்.
அதனை
விடுத்து தனிப்பட்ட லாபங்களுக்காக பிழையான அறிக்கைகளையும் தரவுகளையும் உருவாக்கி அதனை வெளியிடுவதானது சமாதானத்தை
விரும்பும் இரு சமூகங்களுக்கிடையில் சந்தேகத்தையும்,அச்ச நிலையினையுமே உருவாக்கும்.முல்லை
அரசாங்க அதிபர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள
கிராமங்களில் ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்தததற்கான பதிவுகள் உள்ளதை தெளிவாக கோடிட்டு
காட்டியுள்ளதுன்,தமிழ் மக்களில் காணியற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கனவே உரிய
பிரதேச செயலாளர்களாலே அது வழங்க நடவடிக்கையெடுக்கப்கப்பட்டு வருவதுடன்,மற்றும் தமிழ்
மக்களால் அத்துமீறி பிடிக்கப்ட்ட காணிகளுக்கும் காணிப்பத்திரம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான
நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பணியாற்றுவதை ஜீரணிக்க
முடியாத சில தமிழ் தலைமைகள் அபாண்டத்தை சுமத்துவதும்,அதன் மூலம் அரசியல் குளிர் காய்வதும்
வழமையான நிகழ்வாகவே உள்ளது.
எனவே
அவ்வாறு ஒருவருக்கேனும்,வெளி மாவட்டத்தை சேரந்தவருக்கு காணிகள் அமைச்சரால் ,வழங்கப்படவில்லை
என்பதையும்,தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்படவில்லை என்பதையும்,அமைச்சர் றிசாத் பதியுதீன்
மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டானது ஆதரமற்றது என்றும் அமைச்சரின் ஊடக ஆலோசகர் மேலும்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment