முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றம் ஒருவரை சேவையிலிருந்து நீக்க தீர்மானிக்கும்
விடத்து அவர் ஓய்வூதியம் பெறும் தகமையை இழக்கிறார் என ஓய்வூதியத்
திணைக்களத்தின் பொது பணிப்பாளர் டி. சுவர்ணபால தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியினால் பணி
நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும்
சந்தர்ப்பத்தை முன்னாள் பிரதம நீதியரசர் இழந்துள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment