இலங்கைக்கு வருகைத்தந்துள்ள
உகண்டா நாட்டின் ஜனாதிபதி யுவேரி ககுடா முசவேணி இன்று இலங்கையின் வர்த்தக சமூகத்தை
சந்தித்து கலந்தரையாடினார்.இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி
சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கைத்தொழில்,வணிகத்துறை
அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த யாப்பா
அபயவர்தன,இலங்கை ஏற்றமதி அபிவிருத்தி சபையின் தலைவர் ஜனக ரத்னாயக்க,அமைச்சின் செயலாளர்
அநுர சிறிவா்தன,வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அமுனுகம உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
உகண்டா ஜனாதிபதியின்
வருகையினை நினைவு கூறும் வகையில் அமைச்ர றிசாத் பதியுதீன் நினைவு பரிசு ஒன்றை வழங்கி
வைத்தார்.அதே வேளை ஜனாதிபதி தமது வருகையினை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்தி
சபையின் பதிவு புத்தகத்தில் தமது கையெழுத்துக்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment