( எழுதுவது
– புத்தளம் அபூ அஸ்ஜத் -)
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத்த்தின் இறுதி வாரம் வடக்கில் வாழ்ந்த
முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் ஆரம்ப நாளாகும்.அது இன்றுடன் 22 வருடங்களை கடந்து
23 வது வருடத்துக்குள் முகம் புதைத்து கொள்ள தயாராகின்றது.உடுத்திய உடையுடன்,சுமந்த
பிள்ளைகளுடன்,முதுமையின் தழும்புகளுடன்,ஆயுத முணையில் ஒரு சமூகம் தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து
24 மணித்தியாலயங்களுக்குள் இடம் பெயர்க்கப்பட்ட வரலாற்றை சுமந்தவர்கள் இலங்கையின் வடமாகாணத்து
முஸ்லிம் மக்கள் என்பது ஒரு வரலாற்று பதிவாகும்.
கடந்த
20 வருடங்களாக இம்மக்கள் அகதிகள் என்ற முகவரி பொறிக்கப்பட்டு,முத்திரையும் குத்தப்பட்டு
நாட்டின் பல மாவட்டங்களில் தற்காலிக கொட்டில்களில் முகாம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.அன்று
வெளியேற்றப்படுகின்ற போது,75 ஆயிரம் பேர்களாக இருந்த மக்களின் எண்ணிக்கை இன்று அது
பன்மடங்காக அதிகரித்து ஒரு இலட்சத்தையும் எட்டிப்பிடித்து நின்கின்றன.இந்த எண்ணிக்கையானது
ஒரு சமூகத்தின் வெளியேற்றத்துடன் மட்டும் பார்க்கும் ஒன்றாக அமையாது.மாற்றமாக இடம் பெயர்வு கொண்டு வந்து கொடுத்த
சுமையின் வலிகளை சுமப்பவர்கள் ,உள்ளுர் என்ற நாமம் சூட்டப்பட்ட மக்கள் என்பதையும் பார்க்க
வேண்டியுள்ளது.ஒரு நாணயத்தின் இரு புறம் போன்று இந்த இடம் பெயர்வின் வெளிப்பாடுள்ளது.
இன்று
பேசப்படும் விடயமாக இடம் பெயர்வு காணப்படுகின்றது.வடக்கில் மன்னார் ,வுவனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்
ஆகிய 5 மாவட்டங்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் அகதிகாளகினர்.அவர்கள் புத்தளம் மற்றும்,அநுராதபுரம்,உள்ளிட்ட
பல மாவட்டங்களில் தஞ்சமடைந்தனர்.அவர்களுக்கு தேவையானயானற்றை அரசும்,அரச சார்பற்ற நிறுவனங்களும்
பெற்றுக் கொடுத்த போதும்,இம்மக்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டனர்.
இந்த
நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வடக்கில் ஒரு சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்டது.அதனையடுத்து
தமிழ் மக்கள் மீள்குடிமர்த்தப்பட்டனர்.இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதிலும்,அம்மக்களுக்கு
தேவையான வற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலும்,அரசாங்கமும்அப் போதைய மீள்குடியேற்ற
அமைச்சராக இருந்தவருமான றிசாத் பதியுதீன் முனைப்புடன் செயற்பட்டார்.இதே வேளை 1990 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின்
மீள்குடியேற்றம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவில்லை.இந்த நிலைக்கு பிரதான காரணம்
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து சர்வதேசம் அறிந்திருக்காத நிலையினையே
குறிப்பிடலாம்.
அதன்
பிற்பாடு வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் அரசாங்கத்தின் எவ்வித உதவிகளும் கிடைக்காத
நிலையில் தமது மீள்குடியேற்றத்தை சுயமாக ஆரம்பித்தனர்.தம்மிடமிருந்தவற்றைக் கொண்டு
அன்று தாங்கள் வாழ்ந்த பூமியினை நோக்கி பயணித்தனர்.அந்த பயணம் கரடு முரடானாதாக இருந்ததை
மக்கள் கண்டனர்.தாம் வாழ்ந்த வாழ்விடங்கள் காடுகளால் சூழ்ந்திருந்தன.தமது வீடுகள் மண்ணோடு
மண்ணாக காட்சியளித்தன,பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன அழிந்து பேயிருந்தன.இவ்வாறான
சின்னங்கள் மட்டுமே இந்த மக்களை வரவேற்றன.முற்று முழுதாக அனைத்தையும் இழந்த இந்த சமூகம்
இந்த மீள்குடியேற்ற மண்ணில் எதனை பெற்றுக் கொள்ளப் போகின்றர்கள் என்ற கேள்வி தொடராக
எழுந்த வண்ணமே இருக்கின்றன.
குறிப்பாக
வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் போது அரசாங்கத்தாலும்,அரச சார்பற்ற நிறுவனங்களினாலும்
பின்பற்றப்படும் நடைமுறைகள் இந்த முஸ்லிம்களை
புறந்தள்ளியுள்ளது.மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கூட
இந்த முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்ட வண்ணமுள்ளன.இடம்
பெயரவுக்குள்ளான மக்களை பழைய ,புதிய அகதிகள் என்று பிரித்து பார்க்கும் நடை முறையும்
தற்போது முன்னெடுகப்பட்டு வருகின்றது.இதன் மூலம் 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்வுக்குள்ளான
முஸ்லிம்கள் முழுமையாக புறக்கணிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இது
ஒரு புறமிருக்க வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு தனியான அரசியல் தலைமைத்துவத்தால்
மட்டும் முன்னெடுக்கப்பட்ட போதும்,இதனது பலம் போதுமானதாக இல்லை.அரசாங்கத்தில் அங்கம்
வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய
காங்கிரஸ் என்பன இந்த மீள்குடியேற்றத்தில் காட்டும் பங்களிப்பின் பெறுமானம் என்ன வென்பதையும்
உரசிப்பார்க்க வேண்டியுள்ளது.குறிப்பாக மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அன்று ஸ்ரீ.ல.மு.கா.தலைவராக
இருந்த போது வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் காட்டிய அக்கறையிளை தற்போதைய முஸ்லிம் காங்கிரசிலும்,அதில்
உள்ள உறுப்பினர்களிடத்திலும் காணமுடிவதில்லை இது தான் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச
மயப்படுத்தப்படாமைக்கு ஒரு பிரதான காரணமாகும்.தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் அதனை
வைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தும்,பதவிகளை
துக்கியெறியும்,தலைமைத்துவங்கள்,ஒரு இலட்சம் வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் பொடு
போக்கான மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதின் மர்மம் வெளிக் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது.தனிப்பட்ட
அரசியல் நிலைப்பாடுகளுக்காக சமூத்தினை புறந்தள்ளும் போக்கானது கைவிட்டகல வேண்டியது
முக்கியமானதாகும்.
இந்த
நிலையில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை தனியாக கையாள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு
ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்ற கோறிக்கை முன் வைக்கப்பட்ட போதும்,அது நடை முறைக்கு வரவில்லை.அதே வேளை ஜனாதிபதியினால்
நியமிக்கப்பட்ட கற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதனது அறிக்கையில் எட்டு
இடங்களில் குறிப்பிட்டுள்ள வடக்கு முஸ்லிம்களுக்கான பரிந்துரைகள் நடை முறைப்படுத்த
அரசுக்கு வழங்கப்படும் அளுத்தங்களும் போதுமானதாக இருக்கவில்லையென்பதை புரிந்து கொண்ட
அரசு அதனை கிடப்பில்போட்டுள்ளதையும் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.வெறும் வெற்று கோஷங்கள்
மூலம் வடக்கு முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியதை ஒரு போதும் பெற்றுக் கொடுக்க முடியாது
என்ற உண்மையினை நாம் புரிந்து கொண்டு எமக்கிடையில் காணப்படும் இடைவெளியினை குறைத்துக்
கொண்டு பாதிக்கப்பட்டுள்ள,அடக்கி ஒடுக்க எத்தனிக்கப்படும் சக்திகளிடமிருந்து வடக்கு
முஸ்லிம்களை பாதுகாத்து அவர்களது மீள்குடியேற்றத்தை திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்க
வேண்டியது தான் தற்போதுள்ள சவாலாகும்.இதனை வெற்றிக் கொள்ள அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள்,பாராளுமன்ற
உறுப்பினர்கள் மனந்திறந்து பேச வேண்டும், அதற்கான நல்லதொரு சந்தரப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.வடக்கு
முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கு 23 வயது ஆகும் இந்த நிலையில் அடுத்த ஆண்டில் வடமாகாண
முஸ்லிம்கள் தமது தாயகத்தில் கௌரவமாக வாழ வேண்டும் என்பது தான் எமது எலோரதும் எதிர்பார்ப்பாகும்..
No comments:
Post a Comment