
13ஆவது திருத்த சட்டத்தை இல்லாதொழித்து மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எதிராக அனைத்து மாகாண சபைகளும் போராட முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
"இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே மாகாண சபை முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவ கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி போன்ற இனவாத கட்சிகளை திருப்திப்படுத்துவதற்காக மாகாண சபை முறைமை ஒழிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
இதனால், மாகாண சபை முறைமை நீக்குவதற்கு எதிராக அனைத்து மாகாண சபைகளும் போராட வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வில் மாகாண சபை முறைமை ஒழிப்பு எதிராக பிரரேணையொன்றை கொண்டுவரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment