Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, September 15, 2012

முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமையை மு.கா காப்பாற்ற வேண்டும்: சம்பந்தன்


முஸ்லிம் காங்கிரஸின் வாக்குறுதியை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.

இன்று காலை கொழும்பிலுள்ள ஹோட்டல் ஜானகியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி கூறினார். அங்கு மேலும் கூறுகையில்...

'முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது தேர்தல் பிரசாரங்களில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது வெக்கக்கேடானது என்றும் கூறியிருந்தார். மொத்தத்தில் அரசுக்கு எதிராக பிரசாரத்தினை மேற்கொண்டுதான் 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் காங்கிரஸின் அரசுக்கெதிரான பிரசாரங்களை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடக்கூடாது.

பெரும்பாலான முஸ்லிம் மக்கள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து கிழக்கு மாகாணசபையில் செயற்பட வேண்டும் என்றே கோரிக்கை வைத்திருக்கின்றனர். நாங்களும் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலைமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவே இருக்கிறோம். எங்களுடைய தேர்தல் பிரசாரங்களில்கூட இதனை வலியுறுத்தியிருந்தோம். இப்பொழுதும் இதனைத்தான் நாங்கள் கூறுகின்றோம்.

ஆகையினால், முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாஷைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழிவிட வேண்டும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்' என்று மேலும் கூறினார்.

No comments:

Post a Comment