Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, September 18, 2012

ஜனாதிபதி மஹிந்தவின் இந்திய விஜயத்தை எதிர்த்து தீக்குளித்த சேலம் இளைஞன் மரணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து தீக்குளித்த சேலம் முச்சக்கரவண்டி ஓட்டுனர், சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ராஜ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை எதிர்த்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மேற்படி இளைஞன் தீக்குளித்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே இன்று சிகிச்சை பலனின்றிய நிலையில் உயிரிழந்துள்ளார். (தற்ஸ்தமிழ்)

No comments:

Post a Comment