Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, September 13, 2012

புத்தளத்தில் கைகுண்டு செயலிழப்பு


புத்தளம் உடையாவெளி பிரதேச குளமொன்றிலிருந்து 4 கைக்குண்டுகளை் மீட்கப்பட்டதுடன்,அவற்றை புத்தளம் 213 ஆம் இரானுவ பிரிவின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் இன்று மாலை செயலிழக்கச் செய்துள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.


இன்று பிற்பகல் வேளை இக்குளப் புனரமைப்பு பணிகள் இடம் பொற்றுக் கொண்டிருந்த போது,சேற்றுடன் இந்த குண்டுகள் காணப்பட்டுள்ளன.இதனையடுத்து இங்கு விரைந்த புத்தளம் பிரதேச செயலாளர் புத்தளம் பொலீஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து,இரானுவத்தினர் வரவழைக்கப்பட்டு.இக்கைக்குண்டுகள் இரானுவ முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டு செயலிழக்கப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment