Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, June 3, 2012

அமைச்சர் றிசாதின் பணியினை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்-உலமா சபை



வ்வுனியா மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வ்வுனியா மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர்களுக்கான கூட்டமொன்று இன்று வ்வுனியா இஸ்லாமிய கலாச்சார அபிவிருத்தி சபை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றது.


இதில் எடுக்கப்பட்ட தீரடமானங்களை வ்வுனியா மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றுமு செயலளார் ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவ்வறிக்கையின் விபரங்கள் வருமாறு –
 ( 1 ) வ்வுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என மூவின மக்களும் புரிந்துணர்வுடனும்,ஒற்றுமையுடனும் வாழ்ந்து வரும் இத்தருனத்தில் அதை சீர்குலைக்க  சுயநலம் போக்கு கொண்ட சில அரசியல்வாதிகள் ஈடுபடுவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.
 ( 2 ) முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு முறைமுகமாக தடைகளை ஏற்படுத்தி அவர்களை  பிழையானவர்களாக ஊடகங்களில்  சித்தரித்துக்காட்டும்,சில தமிழ் அரசியல்வதிகளின் போக்கு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

 ( 3 ) வன்னி  மக்களின் விடிவுக்காகவும்,அவர்களின் சௌபாக்கிய வாழ்வுக்காகவும் நீதியுடனும்,நேர்மையுடனும் இனம் மதம் பாராமல் உழைத்து வரும்,தன்னலம் பாராத சமூக சேவையாளனாகவே அமைச்சர் கௌரவ அல்-ஹாஜ் றிசாத் பதியுதீன் அவர்களை மூவின மக்களும்,பார்க்கின்றனர்.இந்த நிலையில அமைச்சர மீது அவதுறுகளை அள்ளிவீசி, இனமுரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் லாபம் தேட முற்படும்,சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளையும்,அவர்கள் விடும் பிழையான அறிக்கைகளையும்,வண்மையாக கண்டிக்கின்றோம்.

 ( 4 ) வன்னி மாவட்ட மூவின மக்களும்,யுத்த்த்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து பேர் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.தற்போது மீள்குடியேற்றம் நடைபெறும் இவ்வேளையில் மீள்குடியேறும் இம்மக்களை இன மத வேறுபாடு இன்றி,மனிதாபிமான முறையில்  ஏற்றுக் கொள்ளுமாறும்,இதற்கு முட்டுக்கட்டையாக இருப்போரிடம்,அன்பாக வேண்டுகோள்விடுக்கின்றோம்.

 ( 5 ) அரசியல் வாதிகளோ அல்லது சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களோ மீள்குடியேற்றம் மற்றும்,காணி போன்ற விடயங்களில் தமக்குள் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்காக ஊடகங்கள் வாயிலாக சமயங்களை குறை கூறுவதையும்,பிழையாக விமர்சிப்பதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்ப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment