இனவாதமும்,மதவாதமும்.பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில்
உறவை ஏற்படுத்தாது,மாறாக விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் இருந்தால்
மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என வன்னி மாவட்டஅபிவிருத்தி குழுவின்
தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று மன்னார் மடு பிரதேச செயலகப்
பிரிவில் பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலைக்கான பாடசாலை கட்டிடம்,அதிபர்
விடுதி,கணணி பிரிவு என்பனவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொ்ண்டு
உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர்.அருட் சகோதரர் சீ.எஸ்.விஜயதாசன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர பேசும் போது கூறியதாவது-
இனங்களுக்கிடையில்
காணப்படும் புரிந்துணர்வை சீர் குலைக்க சில சக்திகள்
முற்படுகின்றன.அவற்றுக்கு இடம் கொடுக்க முடியாது.எமது மண்ணில் நாம் சகலரும்
சமமானவர்கள்,இதில் சாதி பாகுபாடுகளோ,மத ரீதியான பிளவுகளேh ஏற;பட இடம்
கொடுக்க முடியாது.இந்த விடயங்களை நாம் பாடசாலைகளில மாணவர்களுக்கு கற்றுக்
கொடுக்க வேண்டும்.பாடசாலை அதிபர்.அருட் சகோதரர் சீ.எஸ்.விஜயதாசன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர பேசும் போது கூறியதாவது-
தற்போதைய இப்பாடசாலையின் அதிபராக இருக்கின்ற அருட் சகோதரர் விஜயதாசன் அவர்கள் நல்ல மனிதர்,இதற்கு முன்னர் அவர் வங்காலை பாடசாலையில் அதிபராக கடமையாற்றிவர் சிறந்த நிர்வாகி,தன்னலம் பாராது பிற நலத்ததை முதன்மை படுத்தி செற்படுபவர்,இவர் இப்பாடசாலையி்ன அதிபராக வந்தமை இந்த மாணவர்கள் செய்த பாக்கியமாக பாரக்கின்றேன்.
ஏனெனில் கற்கும் மாணவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுப்பது கல்வியை தான் ,அது தான் அந்த பிள்ளையின் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து செல்லும் .கற்றலின் முக்கியத்துவம்,மாணவ சமூகத்தின் எதிர்கால் இலக்குகளை இனம் கண்டு அதனை செயற்படுத்தும் ஆற்றல் கொ்ணடவர் அருட் சகோதரர் விஜயதாசன் அவர்கள் என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
No comments:
Post a Comment