யாழ் முஸ்லிம் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த வேர் அறுதலின் வலி என்ற
கவிதை தொகுப்பின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்வி வட்ட கேடபோர் கூடத்தில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து
கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத்
துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஆற்றிய
உரையின் முழுவடிவம்
யாழ்
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்தும், தமது சமூகத்தின் தேவை குறித்தும் யாழ்
மாவட்ட வசதி படைத்தவர்கள்,கல்விமான்கள்,பல்
துறை சாரந்நவர்கள் இன்று சிந்திக்கின்ற நிலை உருவாகியுள்ளது.எப்படியாவது தமது யாழ்
முஸ்லிம் சமூகத்தினை அவர்கள் வாழ்ந்த மண்ணில் சென்று வாழ வைப்பதற்காக தமது வளங்களை
செலவு செய்யும் நிலை இன்று உருவாகியுள்ளது.இந்த முயற்சிக்கு எனது முழுமையான ஆதரவை
எந்த நேரமும் வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்ற நல்ல செய்தியினை
சொல்லிக் கொண்டு அண்ணண் மாவை சேனாதி ராஜா அவர்கள் என்னை பற்றி சொன்னார்,அவர் அதனை
சொல்லுவதற்கு தகுதியுடையவர்,அவர் ஒரு மூத்த அரசியல்வாதி,நான் வயதில்
சிறியவன்,தம்பி றிசாத் சில விடயங்களில் முரண்பாடுகளை காணாமல் உடன்பாட்டோடு செயற்பட
வேண்டும் என்று நல்லதொரு ஆலோசனையினை சொன்னார்.அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.அதே
போன்று கவிஞர் ஏ.ஆர்.ஹஸீர் அவர்கள் ஒரு பத்திரிகையாளர்களின் மாநாட்டைக் கூட்டி
உங்களது நியாயத்தை சொல்லுங்கள் என்று ஒரு வேண்டுகோளைவிடுத்தார்.நீங்கள் சொன்னது
போன்று தமிழ் பத்திரிகைகளை எல்லாம் நான் அழைத்து எனக்கும்,மன்னார் ஆயர்
அவர்களுக்கும் தனிப்பட்ட எந்த வித குரோதமும் கிடையாது.மன்னாரில் நானாட்டான்
என்கின்ற ஒரு பிரதேசம் இருக்கின்றது.அளவக்கை என்கின்ற தமிழர்களும்,முஸ்லிம்களும் இணைந்து வாழும்
கிராமம் இருக்கின்றது.ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஒரு
சமாதான சூழலில் முஸ்லிம்கள் சென்று தமக்கு சொந்தமான காணிகளை மிகவும் மலிவான
விலையில் தமிழ் மக்களுக்கு
விற்றுவிற்றார்கள்.பின்னர்
அம்மக்கள் மீண்டும் இடம் பெயரந்ததன் பின்னர் தற்போது அங்கு மீள்குடியேற்றத்திற்கு
சென்ற போது அன்றிருந்த ஒரு சில குடும்பம்,இன்று பல குடும்பங்களாக மாறிய நிலையில்
அங்கிருந்த தமிழ் சகோதரி ஒருவர் தமது காணியினை முஸ்லிம சகோதர்ர் ஒருவருக்கு விற்க
சென்ற போது,அங்கிருந்த பாதிரி ஒருவர் இந்த செய்தியினை மன்னார் ஆயர் அவர்களுக்கு
தெரியப்படுத்த அந்த பெண்மனியினை ஆயர் அழைத்து பெண்மனியே முஸ்லிம்களுக்கு நீ இங்கு
காணிகளை விற்க கூடாது என்ற சொன்னதற்கு அந்த பெண்மனி சொல்லியிருக்கின்றால் எனக்கு
பணம் தேவை,அவர்கள் நல்ல விலை தருகின்றார்கள்,அவர்களும் நாங்களும் ஒன்றாக
பாடசாலைகளில் கற்றவர்கள்,நண்பர்கள்,எனது சகோதர்ர் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்ல
முஸ்லிம் சகோதர்ர் ஒருவர் தான் தமது காணியினை விற்று உதவி செய்துள்ளார்,அவர்கள்
தற்போது வாழ இடமில்லை,இங்கு அரச காணிகளும் இல்லை என்று சொன்ன போது,நான்
சொல்லுகின்றேன் அந்த காணியினை நீ முஸ்லிம்களுக்கு விற்றால் உன்க்கு நான்
சாபமிடுவேன்,இது கடவுளின் சாபமாகும் என்று ஆயர் சொல்ல,ஆயரின் இல்லமும் எனது இல்லமும்
அமைந்துள்ள பிரதேசத்தின் துரம் இரண்டு கிலோ மிட்டர் தொலைவில் உள்ளது.அந்த பெண்மனி
இவ்விடயத்தை என்னிடம் வந்து கண்ணீர விட்டழுது சொன்னார்.இந்த விடயத்தை நான் அந்த
ஊடக மாநாட்டில் அன்று சொன்னேன்.,அதே போன்று மன்னாரிலே விடத்தல்தீவு என்ற கிராமம்
இருக்கின்றது,அந்த கிராமம் கத்தோலிக்கர்களும்,இஸ்லாமியர்களும் சமமாக வாழ்ந்த கிராமம்,இந்துக்கள்
குறைவாக வாழ்ந்த கிராமம்,அங்கு
அவர்களுக்கிடையில் எவ்வித பிளவுகளும் பிரச்சினைகளும் இருந்த்தில்லை.மிகவும் ஒற்றுமையாக
ஒரே முஸ்லிம் பாடசாலையான அலிகார் மத்திய பாடசாலையில்
தான் கிறிஸ்தவர்களும்,இந்துக்களும் கல்வி கற்றார்கள்.அந்த கிராமம் இன்று அழிந்து
காண்ப்படுகின்றது.
அந்த மக்களுக்கு
சொந்தமான வயல் காணிகளில் பிறமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 தமிழ்
குடும்பங்கள் விவசாயத்தில ஈடுபட்டன.,இன்று 170 குடும்பங்களாக மாறியுள்ளனர்.இவர்கள்
முஸ்லிம்கள்
-
3 -
வாழ்ந்த
சன்னார் பகுதியில் சுமார் மூன்று கிலோ
மீட்ட்டர் நீளத்திற்கு இந்த காணிகளில் ஒவ்வொருவரும் இரண்டு,மூன்று ஏக்கர் வீதம்
பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.விடத்தல்தீவிலிருந்து 400 குடும்பங்களாக
சென்ற முஸ்லிம்கள் இன்று 21 வருடங்களின் பின்னர் 900 குடும்பங்களாக மாறியுள்ள
நிலையில் அங்கு அவர்கள் மீள்குடியேற வந்தபோது,நான் சென்று அந்த தமிழ் மக்களுடன்
பேசி ஒரு உடன்பாட்டினை எட்டினோம்.ஒரு வருடங்களுக்கு முன்னர் இருந்த பிரதேச
செய்லாளர் அவர்கள் 350 மீட்டர் காணியினை இந்த முஸ்லிம்களுக்கும்,ஏனைய 2650 மீட்டர்
காணியினை தமிழர்களுக்கும் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.இதன் பின்னர்
முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற சென்ற போது,முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்ட
அக்காணிக்குள் ஒரு இந்து கோயிலை அவசரமாக நிர்மாணித்துவிட்டனர்.இந்த விடயம் குறித்து
பிரதேச செயலாளர் அம்மக்களிடம் போய் பேசிய
போது,அவர்கள் பொலீசில் முறைப்பாடொன்றை
செய்துவிட்டு,மறுதின்ம் பிரதான தமிழ் பத்திரிகையொன்றில் அமைச்சர் றிசாத் சன்னாரில்
இருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்ற
சதி என்று கொட்டை எழுத்துக்களில்
செய்தியினை தலைப்பு செய்தியாக வன்னியிலிருக்கின்ற ஒரு சில ஆயுதக்குழுக்களில்
இருந்த பாராமுன்ற உறுப்பினர்கள்,அதனை செய்தியாக போட்டனர்.இந்த செய்தியினை பார்த்த
எனது உள்ளம் வேதனை பட்டது,இது குறித்து நான் எனது தரப்பு நியாயங்களை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன் ஆனால் அதனை அவர்கள்
பிரசுரிக்கவில்லை.
அன்று உதவி அரசாங்க
அதிபராக இருந்தவர் ஒரு இந்து,பிரதேச செயலாளர் ஒரு இந்து,காணி அதிகாரி ஒரு
கத்தோலிக்கர் இவர்களை நான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் அழைத்து
முஸ்லிம்கள் வாழ்வதற்கும் இந்த காணியினை கொடுக்க வேண்டும் என்ற நியாயங்களை விளக்கப்படுத்துங்கள்
என்று கேட்டுக் கொண்டேன்.இருந்த போதும்,350 மீட்டரும் கிடைக்கவில்லை,அதே போல்
தற்போது 1400 குடும்பங்க்ள வாழும் மற்றுமொரு முஸ்லிம் கிராம்ம பெரியமடு.அந்த
கிராமத்தில அருகில் உள்ள காணிகளையும் இவர்கள் பிடித்து ஈச்சிளவக்கை என்ற பெயரில்
தனித் தமிழ்
கிராமம்
ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.அதில் வாழ்பவர்கள் விடுதலைப் புலிகளினால் மாவீர்ர்
குடும்பங்களாக பிரகடனப்படுத்தப்பட்டவர்கள்.இவர்கள் இந்த மாவட்டத்த்தை
சேர்ந்தவர்களும் அல்லர்.அதெல்லாவற்றையும் நான் பிழையாக சொல்லவில்லை.அவர்கள் ஒரு
நோக்கத்திற்க்காக போரடி உயிர்களை இழந்தவர்கள்,அவர்கள் வாழட்டும்,அவர்களது
பிள்ளைகளின் கல்விக்காக நான் அண்மையில் பாடசாலைக்கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து
அதில் 5 ஆம் ஆண்டு வரை நடத்துவதற்கு அனுமதியினையும் வழங்கியுள்ளதுடன்,நேரில்
சென்று அவற்றை எனது கைகளால் திறந்தும் வைத்தேன்.இப்டியான நிலையில் இந்த 3 ஆயிரம்
கிலோ மீட்டர் துரத்திறகு பின்னால் காடுகளாக
காட்சியளித்த காணியில் மீள்குடியேறுவதற்கான சிபாரிசினை இந்த குழுவினர்
சமர்ப்பித்தனர்.
அதன் பின்னர் அதனை
துப்பரவு செய்ய முஸ்லிம்கள் சென்ற போது அவர்கள் என்னிடம் முட்டிமோதினர்,எதற்காக
எம்மை பின்னால் போகச் சொல்கின்றீர்கள் என்று கேட்டனர் .நான் அதனை நியாயப்படுத்தி
ஒன்றும் செய்ய முடியாது பத்திரிகைகள் எல்லாம் அவர்களின் பக்கம் நாம் உண்மையினை
சொன்னால்,அவைகள் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளுக்கு மட்டும்
முன்னுரிமையளித்து செய்திவெளியிடுகின்றன என்ற யதார்த்தத்தை சொன்னேன்.இவ்வாறான
நிலையில்,இந்த முஸ்லிம்கள் காட்டுக்குள் செல்லக் பாதையினை கூட வழங்க இந்த மக்கள்
மறுத்துவிட்டனர்.
அரசாங்கத்திடம்
பணம் கேட்டால் பணமில்லை,அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்ய
முன்வருவதுமில்லை,இந்த நிலையில் இந்த மக்கள் ஒவ்வொருவரும் தமது சொந்த பணத்தில் 5 ஆயிரம் ரூபா வீதம் பணம் சேர்த்து தமது காணிகளை
துப்பரவு செய்ய போகும்,போது மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகின்றார்
முஸ்லிம்கள் பலவந்தமாக வந்து அரச காணிகளை அடாத்தாக பிடிக்கிகன்றனர் இதனை தடுத்து
நிறுத்துங்கள் என்று எழுதி அதனது பிரதியினை,அமைச்சர் பஷில் ராஜபக்ச,பாதுகாப்பு
செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆயர் லெட்டர்ஹேட்டில் கடிதம்
-
5 -
எழுதியுள்ளார்.பஷில்
ராஜபக்ஷ அவர்கள் என்னிடம் கேட்டார்,இவ்விடயம் குறித்து நான் அவர்களுக்கு தெளிவை
கொடுத்துவிட்டேன்.
தமிழ்
ஊடகங்களில் பணியாற்றுகின்ற முஸ்லிம் சகோதர்ர்களுக்கு உண்மையினை பிரசுரம் செய்ய
வேண்டும் என்ற ஆதங்கம் காணப்படுகின்றது.நாங்கள் பேசும் மொழி தமிழ்,தமிழ்
பத்திரிகைகளைத் தான் வாசிக்கின்றோம்,ஆனால் எம்மால் தெரிவிக்கும் கருத்துக்களை உரிய
முறையில் அப்பத்திரிகைகள் பிரசுரம் செய்வதில்லை.இதனை தட்டிக்கேட்டால் அவ்
ஊடகவியலாளர்களின் இருப்பு கேள்விக்குரியாகிவிடும் என்பதை எம்மால் உணர முடிகின்றது.
நான் பாராளுமன்றத்தில் சொன்னேன் தம்புள்ளயில் ஒரு சாது முஸ்லிம்களின் இல்லத்தை
உடைப்பதற்கு சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டதை தொலைக்காட்சியில்
பார்த்தேன்.இந்த சட்டத்தை பௌத்த
சாதுவுக்கும்,இந்து ,கத்தோலிக்க முஸ்லிம் மத தலைவர்களுக்கு கையில் எடுக்கும்
அதிகாரமில்லை இது எல்லோருக்கும் பொதுவானதாக தான் இருக்கே வேண்டும்.ஒரு
பள்ளிவாசல் உடைக்கப்பட எடுத்த நடவடிக்கைக்கு எதிராக இலஙகையில் உள்ள முழு முஸ்லிம்
மக்களும்,அதேபோன்ற முஸ்லிம் நாடுகளும் தமது கடும் ஆட்சேபனையினை
வெளிப்படுத்தியது.வடக்கில் 79 பள்ளிவாசல் உடைக்கப்பட்டு
தரைமாக்கப்பட்டிருக்கின்றது.மறிச்சுக்கட்டி முதல்,யாழப்பாணம் வரை தனித்தனியாக
பள்ளிகள் புலிகளினால் துவம்சம் செய்யபட்டது.இதனை நான் பாராளுமன்றத்தில
சொல்லவில்லை.அவ்வாறு சொல்லியிருந்தால் முஸ்லிம்கள் இன்னும் ஆக்ரோஷம்
கொண்டிருப்பார்கள்.முஸ்லிம்களின் மத்த் தளங்கள் அழிக்கப்பட்ட நேரத்திலெல்லாம் மன்னார் ஆயர் பேசவில்லை,நான் சொன்னேன்
துன்பப்படுகின்ற முஸ்லிம்கள் காடுகளை அழித்து மீள வாழ்வதற்கு வந்த போது அதற்கு எதிராக
ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகின்றார்.அப்படியென்றால் நாங்கள் கடலிலா போய் குதிப்பது ? தம்புள்ள சாதுவுக்கும் இந்த ஆயருக்கும்
இடையில் இந்த செயல் மூலம் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை என்று சொன்னதற்கு இதை வைத்து சில
தழிம் அரசியல்வாதிகளும் ,சில தமிழ் ஊடகங்களும் என்னை ஒரு கத்தோலிக்க
சமூகத்தின்
விரோதியாகவும் ,றிசாத் ஒரு மதவாதி என்ற செய்தியினை எழுதியுள்ளன.துன்பப்பட்ட ஒரு
சமூகத்திற்கு இந்த ஊடகங்கள் பேசுவதில்லை,முஸ்லிம் சட்டத்தரணிகள்
பேசுவதில்லை,முஸ்லிம் தனவந்தர்கள் பேசுவதில்லை,முஸ்லிம்அரசியல் வாதிகள் இவ்விடயத்தை
பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை,வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள்
இவ்விடயத்தில் காட்டும் ஆர்வம் போதுமானதாக இல்லை,இவ்வாறானதொரு நிலையில் இந்த
சமூகத்திற்காக நான் குரல் எழுப்புகின்றபோது,மதவாதியாக,இனவாதியாக,குற்றவாளியாக,தண்டனைக்குரியவனாக
இந்த ஊடகங்களும்,சில அரசியல் வாதிகளும் காட்டுவதானது,என்னை தனிப்பட்ட ரீதியில்
கண்டிப்பதாக நான் கருதவில்லை.இந்த முஸ்லிம் சமூகத்தின மீள்குடியேற்றத்தை தடுக்கும்
திட்டமிட்ட சதியாகத்தான இதனை நான் பார்க்கின்றேன்.
எவ்வாறு
புலிகள் ஆயதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தை துரத்தி ஒரு கேவலமான சமூகமாக மாற்றியுள்ளனர்.கௌரவமாக
வாழ்ந்த சமூகம் இன்று அகதிகளாக பிறரிடம் யாசகம் கேட்டு வாழக் கூடிய நிலையில்
இருக்கின்றார்கள். புலிகளின் போராட்டத்தை முஸ்லிம்கள் காட்டிக்
கொடுக்கவில்லை,ஆனால் புலிகள் முஸ்லிம்களை விரட்டிய போது,எமது முஸ்லிம் மக்களுக்கு
வேறு வழியில்லை.புத்தளத்திற்கு நாங்கள் வந்து வாழ்ந்தோம்,அங்கு வாழந்தவர்கள்
எமக்கு முழுமையான உதவிகளை செய்தார்கள்,அவர்கள் வளங்களை தந்தார்கள்,சிறு சிறு
பிரச்சினைகள் ஏற்பட்ட போது உலமா சபை மற்றும் பெரியபள்ளிவாசல்,புத்தளத்து அரசியல்
தலைமைகள்,மக்கள் எல்லோரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.அதற்கு எமது மூச்சு
இருக்கும் வரை நாம் நன்றியாளர்களாக இருப்போம்.ஆனால் இனியும் நாம் அவர்களது வளங்களை
சுரண்டி வாழ முடியாது,இது அநியாயமாகும், மீள்குடியேறுவதன் மூலம் தான் இந்த
நன்றியினை நாம் செய்தவர்களாக மாறுவோம்.
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் பிரபாகரனுடன் செய்த
ஒப்பந்த்த்த்தில் முஸ்லிம்கள் இடம் பெயரந்தவர்கள்கள் என்று உடன்படிக்கையில்
-
7 -
குறிப்பிட்டதற்கு
முழு இடம் பெயர் சமூகமும்,சகோதர்ர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக பேசியது.நாம்
பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் என்ற வாசகம் அந்த உடன்படிக்கையிலிருந்து எடுக்கப்பட்டதை
கண்டித்தார்கள்.இந்த உடன்படிக்கை செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர்
வாழசைசேனையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு
கொளுத்தப்பட்டன.புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இரு முஸ்லிம் ஜனாசாக்களை தர புலிகள் மறுத்தனர்.இவ்வாறான
எண்ணிலடங்கா துன்பங்களை முஸ்லிம்களுக்கு புலிகள் செய்தார்கள்களே அன்றி.தமிழ்
மக்கள் செய்யவில்லை.
தமிழ் முஸ்லிம்
உறவு பற்றி எல்லோரும் பேசலாம்.அண்ணண் மாவை சேனாதி ராஜா பேசினார்,நீங்கள் நல்ல
தமிழர் ,நல்ல மனிதர்,முஸ்லிகளின் முகாம்களுக்கு சென்று துயர் விசாரித்த்தாக கூறினீர்கள்
,அதற்கு நன்றி தெரிவிக்கின்றேன்,உங்களைப் போன்ற தலைவர்கள் உருவாக வேண்டும்,அதே
போன்று உங்களைப் போன்றவர்கள் நீண்டகாலம் வாழவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.அதே
போன்று சம்பந்தன் அய்யா போன்றவர்கள் இருக்க வேண்டும்.அப்போது தான் முஸ்லிம்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வை காண உங்களது உதவி கிடைக்கும்.
வ்வுனியா
சாளம்பைக்குளம் முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்களில் ஒன்று,முஸ்லிம்கள் அங்கிருந்து
வெளியேற்றதன் பின்னர் ,தமிழ் மக்கள்
குடியேற்றப்பட்டனர்.பின்னர் மீள்குடியேற
சென்ற முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளை எதிர் கொண்டனர்.இது குறித்து ஆக்கபூர்வமான
முயற்சிகளை செய்த போது,தமிழ் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அதனை
இனரீதியில் காட்டி தழிழ் பத்திரிகையொன்றில் றிசாத் தமிழர்களை
வெளியேற்றப்பார்க்கின்றார் என்று செய்தி கொடுத்திருந்தார். அதே போன்று வ்வுனியா பட்டாணிச்சூர்
கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தின் நடுவில் தமிழ் பெண்மணியினை குடியமர்த்த
செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிராம
மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினையினை தோற்றுவிக்க
முற்பட்டது
மட்டுமல்லாமல் அதிலும் என்னை வைத்து அரசில் அசிங்கத்தை அரகேற்றினார்.பாரதி
புரத்திலிருந்து ஒரு தமிழ் சகோதரி துரத்தப்பட்டார் என்ற பிழையான செய்தியினை
பெருஞ்செய்தியாக முக்கியத்துவமளித்து வெளியிட்ட சில தமிழ் ஊடகங்கள்,ஒரு இலட்சம்
முஸ்லிம்கள் பலவந்தமாக புலிகளால் வெளியேற்றப்பட்டடமைகக்கு என்ன முக்கியத்துவத்தை
கொடுத்துள்ளார்கள். என கேட்க விரும்புகின்றேன்.
முஸ்லிம்கள்
மீள்குடியேறலாம் வாருங்கள் என்று வாயால் கூறலாம்,ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்த
பிரதச செயலளார் ஒருவரும்,அரசாங்க அதிபர் ஒருவரும் சில காலங்களுக்கு முன்னர்
ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் வீடு
இருக்கின்றது .அவர்கள் இங்கு மீளக் குடியமர தேவையில்லையென்று கூறியுள்யார்.
.அவ்வேளையில் நான் அங்கிருக்கவில்லை,இருந்திருந்தால் நல்ல பதில்களை வழங்கியிருப்பேன்.ஏன்
இதனை சொல்கின்றேன் எனில் இன்று அரச இயந்திரத்தின் முக்கிய பதவிகளில் .இருப்பவர்கள்
இந்த மீள்குடியேற்றத்தை திட்டமிட்டு தடுக்கின்றனர்,ஒரு சில மதவாதிகள் இந்த
மீள்குடியேற்றத்தை தடுகின்றனர்.உங்களைப் போன்ற ,சம்பந்தன் அய்யா போன்ற தமிழரசுக
கட்சி அரசியல் தலைமைகள் அல்ல,அன்று ஆயுதம் துக்கி இந்த இன அழிவை இந்த மண்ணில் ஏற்படுத்தியதுடன்,தமது சகோதர்ர்களை கொன்று
குவித்து இன்று தமிழ் தேசிய வாதிகளாக பேசுகின்ற,அறிக்கைவிடுகின்ற அரசியல் வாதிகள் மற்றும்
அரச இயந்திரம், சில இனவாதிகள் என பலரும் இந்த மீள்குடியேற்றத்தை தடுக்கின்றனர்.
இவர்களது
பின்னால் யூ.என்.சீ.ஆர் நிறுவனம் இருக்கின்றது.,மீள்குடியேற செல்லும்
மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாவினை வழங்க
வேண்டிய இந்த நிறுவனம் தமிழ் மக்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்கியதுடன்,முஸ்லிம்களுக்கு
இதனை வழங்க மறுத்ததுடன்,புதிய வியாக்கியானங்களை புதிய,பழைய அகதிகள் என்றுகூற
ஆரம்பித்துள்ளனர்.நான் ஜெனீவா வரை சென்று அங்குள்ள தலைமையகத்துக்கு எழுத்து மூலமாக
அறிவித்துள்ளேன்.இது வரைக்கும்
-
9 -
அந்த
கொடுப்பனவு வழங்கப்படவில்லை.அதே வேளை ஜனாதிபதியிடம் சொல்லி அமைச்சரவை
பத்திரமொன்றின் மூலம் இடம் பெயர்ந்தவர்களில் பழைய,புதிய அகதிகள் இலைலை என்பதை
தீர்மானமாக எடுத்துள்ளோம்.அதனை வைத்து நாம் இந்த அமைப்புக்கும்,இதனை
உடக்படிக்கையாக செய்த அமைச்சுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆராய்ந்து
வருகின்றோம்.
இந்த
மீள்குடியேற்றத்தை எவ்வாறு செய்வது என்பது குறித்து தமிழரசுக்கட்சியின் உதவி எமக்கு தேவையாகவுள்ளது.பல பிரச்சினைகள்
இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.பல பௌத்த விகாரைகள் புதிதாக
வருகின்றது.சில குடியேற்றங்களுக்கான அடித்தளம் இடம் பெறுகின்றது,இரானுவ மயமாக்கல்
இடம் பெறுகின்றது.எங்களை பொறுத்த மட்டில் துணிந்து இதனை பேச முடியாத நிலை,ஏனெனில்
புலிகளால் துரத்தப்பட்டவர்கள் நாங்கள்,நாம் மீள்குடியேற செல்கின்ற போது தமிழ்
ஊடகங்கள் சில,தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்,சில அரச இயந்திரங்களில் உள்ள
தமிழ் அதிகாரிகள் அதற்கு தடையாக
இருக்கின்றனர்..இவர்கள் எங்களை அரவணைக்க மறுக்கும் போது எமது மாற்று தெரிவு
என்வென்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.இவர்களை விட இரானுவத்தினர் எங்களை
குடியேற சொல்கின்றார்கள்,அதற்கான உதவிகளை செய்கின்றார்கள் என்றால் இரானுவத்தினர்
சிறந்தவர்கள என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.அப்படியென்றால் எவ்வாறு முஸ்லிம்
தலைமைகள் இரானுவத்தை குறையுங்கள் என்று சொல்லமுடியும்.எமது முஸ்லிம் சமூகத்தின்
பிரச்சினைகளை கேட்பதற்கு கூட இன்று தமிழ் தலைமைகள் தயாரில்லாத நிலையில உங்களைப்
போன்ற நல்லவர்கள் இதனை கேட்பதற்கான சக்தியினை இறைவன் கொடுத்திருக்கின்றான்.
யாழ்ப்பாண
முஸ்லிம்களது பிரச்சனை சற்று வித்தியாசமானது,யாழில் முஸ்லிம்களுக்கான பாராளுமன்ற
பிரதி நிதித்துவம் இல்லை இவர்கள யாரிடம் போவார்கள். யாழ் முஸ்லிம்கள்
மீள்குடியேறும் பிரதேசத்தில் ஒரு
-
10 -
கிராம
அதிகாரியை நியமிக்க நடவடிக்கையெடுங்கள்,ஜனுஸ் என்ற யாழ்ப்பாண கிராம அதிகாரியை அந்த
பகுதிக்கு நியமியுங்கள் என்று பிரதேச செயலாளரிடம் கேட்ட போது,அதற்கு ஏதுவான பதிலை
அவர் அளிக்கவில்லை.இது குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளேன்.இது குறித்து
நான் பேசினால் நான் குற்றவாளி என்னை மன்னார ஆயரிடம் மன்னிப்புக் கோறுமாறு கூறுகின்றனர்.நான் பிழை
செய்யாமல் எதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்,இஸ்லாம் மன்னிப்பு கேட்பதை
வலியுறுத்துகின்றது.ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் அநியாயம் செய்தால்
அநியாயாத்துக்குட்பட்டவன் மன்னிப்பு வழங்கும் வரை இறைவனை அநியாயம் செய்தவனை
மன்னிக்க மாட்டான் என்பதை தெளிவாக கூறிவருகின்றது.எனது சமூகத்திற்கு செய்யப்பட்ட
அநீதியினை பேசியதற்காக சில தமிழ் ஊடகங்களும்,அரசில் வாதிகளும் என்கெதிராக கொண்டு
செல்லும் பிரசாரத்தினால் நான் எவரிடமும் மன்னிப்பு கேட்டால் அது எனது சமூகத்தின்
மீள்குடியேற்றத்திற்கு என்னாலேயே ஏற்படுத்தப்பட்ட தடையென கருதுகின்றேன்.அதனால்
மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தெளிவாக கூறி வைக்கவிரும்புகின்றேன்.
நான் தனிப்பட்ட
முறையில் எவரையும் தாக்கவில்லை.பிழை செய்தால் அதனை சுட்டிக்காட்ட
வேண்டியதும் எமது பொருப்பாகும்.அது ஜனாதிபதியாக இருந்தாலும்,மத்த் தலைவராக
இருந்தாலும் சரி,எனக்கு எதிராக மன்னார் ஆயர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கண்ட
நிகழ்வையடுத்து முஸ்லிம்கள் ஆத்திரம் கொண்டார்கள்,ஆயருக்கு எதிராக மன்னார் பள்ளிவாசல்
சம்மேளனம் தீர்மானங்களை நிறைவேற்றியது.அவருக்கு எதிராக பாரிய ஆரப்பாட்டங்களை செய்ய
தயாராகினர்.ஆனால் நான் அதனை செய்ய வேண்டாம் என வேண்டுகோள்விடுத்தேன்,ஏனெனில இனவாதத்தை
விதைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை,சில இனவாதிகள் அதனை செய்தார்கள்
என்பதற்காக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தினையும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்துவதில்
தார்மீகம் இல்லை.,இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு வரும் தீர்வானது
ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்ற விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற
-
11 -
பிரதி
நிதித்துவம் எமது முழுமையான பங்களிப்பை வழங்கும் என்பதை உறுதியாக
கூறவிரும்புகின்றேன்.அன்றிலிருந்து இன்று வரை உங்களது உயிர்களை கொடுத்து,இழக்க
வேண்டிய எல்லாவற்றையும் இழந்து,அகதியாகி,ஈழக்கோறிக்கையினையும் இழந்து,இணைந்து
இருந்த வடகிழக்கும் இன்று இல்லாத நிலையில் தமது போராட்டத்தை இன்றும்
முன்னெடுத்துவருகின்றீர்கள்.உங்களால் தனித்து இதனை பெற முடியாது நிச்சயமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின்
உள்ளங்களை நீங்கள் வெல்ல வேணடும்.அந்த உள்ளங்களை வெல்லுகின்ற போது,முஸ்லிம்
நாடுகள் உதவி செய்ய முன்வருவார்கள்,ஜனாதிபதிக்கு அண்மையில் ஏற்பட்ட துன்பத்தின்
போது முஸ்லிம் நாடுகள் உதவி செய்தன.அதே போன்ற முஸ்லிம்களின் பலம் மாறும்.
நாடு கேட்ட நீங்கள் இன்று எல்லாவற்றையும் இழந்து
நிற்கின்றீர்கள்,இருந்த காணிகளில் புதுப்புது கட்டிடங்ளை கானுகின்றாம்,தடுப்பில்
உள்ள பிள்ளைகளை விடுவிக்க சத்தியாக்கிரகம் செய்கின்றீர்கள்,இவற்றுக்கான தீர்வை காண
வேண்டும்,அதற்கு நீங்கள் எமது முஸ்லிம்களை அவர்களது மண்ணில் குடியேற்றித்தாருங்கள்,நீங்கள்
நிதிகளை வழங்கத் தேவையில்லை.ஆனால் இதுவரை யாழ் முஸ்லிம்களை அழைத்து அவர்களது
பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கின்றீர்களா,இதனை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
என்பது எனது அவா,எமது இந்த மீள்குடியேற்றப் போராட்டம் ஒரு போதும் தமிழ மக்களின்
தீர்வுக்கு பாதகமாக அமையாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.புலிகள்
செய்த்து குறித்து தமிழ் மக்களை ஒரு போதும் நாம் குறை சொல்ல மாட்டோம்,இன்னும் 3
வருடங்களுக்குள் இந்த முஸ்லிம்கள் தமது மண்ணில் மீள்குடியேறவில்லையென்றால் இனி ஒரு
போதும் இந்த குடியேற்றம் நிகழாது என்பது உறுதியாகும்.
அதே போல்
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது முஸ்லிம்களை நெறிப்படுத்தி மிகவும்
பக்குவமாக இப்பிரச்சினையை தீர்க்க அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை
செயற்பட்டது.அனறு ஒரு பள்ளிவாசலுக்கு
-
12 -
எதிராக
மேற்கொள்ளப்பட்ட இதே போன்று வடக்கில் 79 பள்ளிவாசல்கள்
நிர்மூலமாக்க்கப்பட்டுள்ளன.அவற்றையும் புனரமைத்து முஸ்லிம்களின்
மீள்குடியேற்றத்துக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்,இலஙகையில் உள்ள
பள்ளிவாசல்களை இம்ம்முறை வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து தமது
பார்வையை செலுத்த வேண்டும்.இவ்வருடம் அறவிடப்படும் இந்த சக்காத் நிதியினை
வறுமைப்பட்ட நிலையில் மீள்குடியேறும் சகோதர்ர்களுக்கு கொடுத்து உதவ் வேண்டும்.அதே
போன்று வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து
வாழும் முஸ்லிம் சகோதர்ர்கள்,தமது ஒரு நாள்,அல்லது சில நாட்களுக்கான சம்பளத்தை
ஒன்று சேர்த்து ஜமிய்யத்துல் உலமா மூலமாக இம்மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
இந்த நாட்டில்
பெரும்பான்மை சமூகம் சிறுபான்ரம சமூகத்திற்கு வழங்க வேண்டியதை வழங்கமால் போனதே
இப்பிரச்சினைகளுக்கு காரணம் என்று நாம் கூறிவருகின்றோம்.அதே போன்று வடக்கில்
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுத்து நிறுத்த எடுக்கப்படும் எந்த
செயற்பாடுகளும் ஆரோக்கிமானதாக அமையாது என்பதை நாம் யதார்த்த பூர்வமாக அறிந்து
கொள்ள வேண்டும் என்பதை சுட்காட்டவிரும்புகின்றேன்.இறுதியாக தமிழரசுகட்சி
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எடுக்க உள்ள முன்நகர்வானது காலத்தின் இரு
சமூக்கங்களினது ஒற்றுமைக்கு மிகவும் அடிப்படையானது என்பதை நினைபடுத்தி அதற்கு
தங்களது ஒத்துழைப்பை முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருக்கின்றது என்றும் அமைச்சர்
றிசாத் பதியுதீன் தமது உரையில் கூறினார்.
தொகுப்பு –இர்ஷாத் றஹ்மத்துல்லா
very good speach
ReplyDeletekareem
நல்ல உரை இப்படியான தலைவர்கள் எமக்கு தேவை
ReplyDeletewell come hon.minister we appreciate your wonderful speech
ReplyDeleteahamed asjad