முல்லைத்தீவு மாவட்டத்தின் தலைநகராக காணப்படும் முல்லைத்தீவு சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவதால் அதனை பாதுகாப்பான இடமொன்றில் நிர்மாணிப்பது தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வியல் குழுவொன்று
கடந்த மூன்று தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று,ஒட்டுச்
சுட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விஜயம் செய்த இக்குழுவினர் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களையும் சந்தித்த
தமது கருத்துக்களை பெற்றுள்ளனர்.
அதே வேளை மாவட்ட அரசாங்க அதிபர்
வேதனாயகத்தின் தலைமயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் அக்குழுவினர்
கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும்,அக்கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக
ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர்,மன்னால் பாராளுமன்ற உறுப்பினர்
சதாசிவம் கணகரத்தினம் இணையத்துக்கு
தெரிவித்தார்.
அதே வேளை முல்லைதீவு நகரத்திற்கும்,3 ஆம்
கட்டைக்குமிடைப்பட்ட பகுதியில் இந்த நகரம் அமைவது குறித்து கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர்,இது குறித்து மாவட்ட அபிவிருத்தி குழுவில்
கலந்துரையாடப்படவுள்ளதாகவும் மேலும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கணகரத்தினம்
கூறினார்.

No comments:
Post a Comment