வடக்கில் அடுத்த ஆண்டிண் முதற் காலாண்டு பகுதிக்குள் 100 விவசாய குளங்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீட்டினை செய்வதாக விவசயா நீர்ப்பாசன அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அமைச்சர் றிசாத் பதீயுதீனிடம் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் றிசாத் பதீயுதீன் அமைச்சர் சந்திரசேனவை சந்தித்து வடக்கில் மன்னார்,வ்வுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேறியுள்ளதால் அவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுவதாகவும்,அதனை முன்னெடுக்கதுர்ந்து போயுள்ள மற்றும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் விவசாய குளங்களை புனரமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதன் பலனாக அமைச்சர இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளதாக அமைச்சர றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அதே வேளை மன்னார் மறிச்சுக்கட்டி,வெல்லாங்குளம்,பெரியமடு,மற்றும் வ்வுனியா சூடுவேந்தபுளவு பகுதிகளில் கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கையியனையும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன,அமைச்சர் றிசாத் பதீயுதீனிடம் கூறினார்.
தற்போது விவசாய செய்கையில் மக்கள் ஈடுபட்டு வருவதால் அவர்களது உற்பத்திகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு கமநல சேவை திணைக்களத்தின் பங்களிப்பு இன்றியமையாத்து என்றும் அமைச்சர் றிசாத் பதியதீன்,அமைச்சர்எஸ்.எம்.சந்திரசேனவிடம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment