புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி இளைஞர், பெண்கள் மற்றும் பொது மக்களுக்கான தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று கடந்த 12.08.2017 அன்று சனிக்கிழமை சர்வேதச இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தரின் வீட்டில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதிபலனாக அப்பிரதேச இளைஞர் குழுக்கள் மூலம் பொது இடங்களில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர் போன்றவை வழங்கப்பட்டன.