Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, April 19, 2015

அர்ஜூன் மகேந்திரனுக்கு நேரடி தொடர்பில்லை: விசாரணை குழு

திறைசேரி பிணை முறிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரும் மத்திய வங்கியின் ஆளுநருமானஅர்ஜூன் மகேந்திரனுக்கு நேரடியான தொடர்பேதும் இல்லை என்று மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், இவ்விரு பதவிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். 


நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கபபட்டார். சட்டவிரோதமான முறையில் திறைசேரி பத்திரங்களை அர்ஜூன் மகேந்திரன் வழங்கியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, அவரிடம் கடந்த வியாழக்கிழமை ஆறு மணிநேரம் விசாரணை நடத்தியது.  இதேவேளை, அவர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.