Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, April 6, 2015

போலி அடையாள அட்டைகள் சிக்கின

கொட்டாவ, சிறிமல் வத்தையிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த போலி கச்சேரியை கொட்டாவ பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை சுற்றிவளைத்துள்ளனர்.
அந்த வீட்டிலிருந்து போலியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகள் 5 ஆயிரத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான உபகரணங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்களில் பொருட்களை பெற்றுகொள்வதற்காகவே இந்த போலியான தேசிய அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வீட்டிலிருந்த சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், அவரை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினமே ஆஜர்படுத்தினர். நீதவான், அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.