Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, January 20, 2015

வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அமைச்சர் றிசாதின் வாழ்த்து செய்தி


நடை பெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளது தொடர்பில் தமது வாழ்த்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான  றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பாக இருந்தவர் என்ற வகையிலும்,வன்னி மாவட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் தமது மாவட்டத்தில் இருந்து இம்முறை கல்விப்பொதுத்தரதஉயர் தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்று மாவட்டத்து நன்மதிப்பை பெற்றுக்கொடுத்துள்ளது தொடர்பில் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதாகவும்,எதிர்காலத்திலும் இந்த பாடசாலை வரலாறுகளை படைக்க வேண்டும்  என்றும் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குலாத்திற்கு கல்வி சார் சமூகத்தினை உருவாக்க அளித்துவரும் பங்களிப்பு பாராட்டுக் குரியது என்றும் கூறினார்.
அதே வேனை கடந்த 10 வருடங்களாக வன்னி மாவட்ட கல்வி மேம்பாட்டுடன் கூடிய பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாம் பெற்றுக் கொடுத்துள்ளதை நினைவுபடுத்திய அமைச்சர் றிசாத் பதியுதீன் எதிர்காலத்திலும் தமது பணியினை இடைவிடாது முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறினார்.