Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, November 23, 2014


 


மக்கள் சக்திக்கு எதிராக அரசியல் பதவிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவினை எவ்வாறு உண்டாக்கப்போகின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்ற போது தற்போதைய களத்தில் பேசப்படும் விடயமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதற்காகவே பொது வேட்பாளரின் வருகை அமைந்திருப்பதாக பரபரப்பான செய்திகள் பரவி வருகின்றன.

இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் ஆட்சி மாற்றங்கள் என்பது சகஜமானது என்பதை வாக்காளர்களாகிய நாங்கள் நன்கு அறிந்த உண்மை.ஆனால் தற்போதைய சூழ் நிலையில் இந்த மாற்றம் எந்தளவு தேவையானது என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.அத்தோடு மக்கள் இன்று எதை விரும்புகின்றார்கள் என்பது தொடர்பிலும் யதார்த்த பூர்வமான பார்வைக்கு முதலிடம் அளிப்பது இன்றியமையாதது.

தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில்  ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தயார் படுத்தி தயாராகிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் இன்னும் சில கட்சிகள் தமது இறுதி ஆதரவு தீர்மாணத்தை அறிவிக்காமல் இருப்பது தொடர்பில் எதிர் மற்றும் ஆதரவு கருத்துக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.உண்மையில் சிறுபான்மை கட்சிகளை பொறுத்த வரையில் இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் என்பது மிகவும் முக்கியமானதும்,அரோக்கியமான முடிவை எடுக்க போதுமான காரணியாக அமைந்திருப்பதை எம்மால் உணர முடிகின்றது.

இன்றை நாட்டின் நடப்புக்களை வைத்து தனிப்பட்ட.குழுக்கள்,கட்சிகள் என்பன அவசரமாக கருத்து வெளியிடுவது என்பது அவர்களது இயலாத்தன்மையினை வெளிப்படுத்தும் தெளிவாக காரணியாகும்.கடந்த தேர்தல்களை பொறுத்த வரையில் சிறுபான்மை மக்கள் அவர்களின் வாக்குகள் பெறும்பான்மையினருக்கு எந்தளவுக்கு தேவையற்றுப் போயிருந்தது என்பதும்,இந்த சிறுபான்மை சமூகத்தின் கோறிக்கைகள் முன் வைக்கப்பட்ட போது அதற்கு கிடைத்த பதிலி்களின் தொகைகள் என்ன என்பது பற்றியும் நாம் கூர்ந்து பார்க்கும் நல்லதொரு சந்தரப்பம் ஏற்பட்டுள்ளது.அண்மைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வைத்து  நாம் தெளிவானதொரு முடிவை இந்த தேர்தலின் போது எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக இலங்கையினை பொறுத்த வரையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் தமது இலக்காக கட்சி அரசியலையே செய்துவந்துள்ளது.சில கட்சிகள் மக்கள் நலனை வைத்து செயற்பட்டு வந்துள்ளதையும் இந்த ரேநத்தில் நாம் மறந்து பேசுவது அந்த கட்சிகளின் மக்கள் நலன் திட்டங்கை  கொச்சைப்படுத்தும் ஒன்றாகவே நோக்க நேரிடும்.இந்த கட்சி அரசியலில் பிரதான பங்கை வகிப்பது பதவி என்பதே உண்மை,கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் அடுத்து எதிர்பார்ப்பது பிரதி அமைச்சர் பதவியினை,பிரதி அமைச்சர் எதிர் பார்ப்பது அமைச்சுப் பதவியினை இவ்வாறு இடம் பெறுவதை எம்மால் குறைத்து பார்க்க முடியாது.இது தான் அரசியலில் எதிர்பார்க்கும் மக்கள் பிரதி நிதிகளின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு பதில்சொல்லும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சிக்கு மக்களின் ஆணை கோறப்படுகின்றது என்ற கருத்து அரசியல் விவாதங்களில் தொனிப்பதை அவதானிக்க முடிகின்றது.இலங்கை அரசியல் சட்ட திட்டங்களுக்கமை உயர் நிதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்பைடையில்,பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் வாடக்குகளின் அடிப்படையில் தீர்மாணிக்கப்பட்ட ஒன்றை நடை முறைக்கு கொண்டுவர முனைகின்ற போது அதற்கு எதிராக செயற்படுவது என்பது எந்தளவுக்கு பொருத்தம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய போட்டியில் வெற்றிக் கொள்ளப் போவது மஹிந்தவா,ஜக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறசேனவா என்ற கேள்விக்கு மத்தியில் அதற்கும் மேலால் சென்று இன்றைய வேட்பாளர்களின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கொஞ்ஞம் ஆராய்ந்து பார்ப்பது காலத்தின் தேவையாகும்,

யுத்தம் நிறைவுற்ற போது இந்த நாடு இருந்த நிலையில் அன்று இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னால் தளபதி சரத் பென்சேகா அவர்களும்,அப்போதைய ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷவும்அ பெற்றுக்கொண்ட வாக்குகள் தொடர்பிலும்,தற்போது போட்டியிடுகின்ற மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் கூட்டி கழித்து நாம்பெற்றுக் கொள்ள வேண்டும்.இன்று எமது நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது சமாதான சூழல்.அடுத்து தனிப்பட்ட மற்றும் சமூக அபிவிருத்திகள்,அடுத்து நாட்டின் அபிவிருத்திகள்.யுத்தம் முடிவடைந்து நான்கு வருட காலத்துக்குள் மஹிந்த ராஜகபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசு செய்துள்ள பணிகள்,அதற்கு எதிர்கட்சிகள் வழங்கிய ஒத்துழைப்புக்கள் தொடர்பில் புத்தி கூர்மையுடன் நாம் ஒரு முறை மீளாய்வு செய்வது பொருத்தமாகும்.இலங்கையில் அண்மையில் இடம் பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை மட்டும் தொடர்ந்து நாம் பேசிவருவது என்பது எமது எதிர்கால வளர்ச்சிக்கு அது உதவியாக அமையாது என்பதையும் நாம் உள்வாங்கிக் கொண்டு இவற்றை நோக்குவது சிறப்பாகும் என்பது எனது எடுகோலாகும்.

இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று அதிகமாக சிந்தித்தவர்கள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கமே,தமிழர்களும்,முஸ்லிம்களும்,பெரும்பான்மை சிங்களவர்களும் எவராக இருந்தாலும் இந்த நாட்டில் சகலருக்கும் சமமான உரிமை என்ற கோற்பட்டினை பகிரங்கமாக பிரகடனப்படுத்திவர் மஹிந்த அவர்களே,தொழில் வாய்ப்பு தொடர்பில் அதிகளவானவர்களுக்கு அரச நியமனங்களை வழங்கியதும் இந்த அரசே,அபிவிருத்தி என்ற அடிப்படையில் மேற்கொண்டுள்ள அதிவேக பாதை தொடக்கம் ஏனைய உட்கட்டமைப்புக்களை கொண்டுவந்து குவித்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே.இவ்வாறான எத்தனையோ அபிவிருத்திகளை கொண்டுவந்த போது எதிர்கட்சியான ஜக்கிய தேசிய கட்சி இதற்கு எதிராக செயற்பட்டுவந்ததுடன்,நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பினை வழங்கவில்லை என்பதற்கு போதுமான ஆதரங்கள் எம்மிடம் உண்டு.

அவ்வப்போது நாட்டில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆளும் எதிர்கட்சி என்று பலரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.எதிர்கட்சியினால் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது.குறைந்த அளவு ஜக்கிய தேசிய கட்சியின் தலைமை வீதிக்கு இறங்கி மக்களுடன் போராட்டம் நடத்தியதா?அல்லது பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு குறைந்த பட்ச நிவாரண திட்டத்தையாவது மேற்கொண்டதா? பேருளவளை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.அந்த உரையின் தேவை சரவ்தேசத்திற்கு இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான அநீதி இழைக்கப்படுகின்றது.அதற்கு காரணம் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசு என காண்பிப்பதற்கும்,ஜெனீவாவில் கொண்டுவரப்படும் இலங்கை எதிர் தீர்மாணத்துக்கு முஸ்லிம்களையும் இணைத்து காட்டும் ஒரு பெரும் நாடகத்தின் ஓர் அம்சம் என்பதை எமது நாட்டு மக்கள் புரியாமலில்லை.ஜக்கிய தேசிய கட்சியினை பொருத்த வரையில் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக எந்த விட்டுக் கொடுப்பையும்,தாரை வார்ப்புக்களையும் மிகவும் எளிதாக செய்யக் கூடியவர்கள்.

சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை தமது நிரலாக கொண்டு செயற்படும் அணியாக ஜக்கிய தேசிய கட்சியினை காணலாம்.இந்த பொது வேட்பாளர் தொடர்பில்,பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன கூறும் கருத்துக்கள் தொடர்பில் எமது மக்கள் எந்தவித நம்பகத்தன்மையினையும் கொள்ள முடியாதுள்ளது.அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால அங்கத்தவர் என்ற வகையில் இருந்த கொண்டதன் பின்னர் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்காக பொது வேட்பாளராக போட்டியிடுகின்றேன் என்று கூறியுள்ளமையின் பின்னணி என்ன என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் மத்தில் கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன.

கட்சிக்குள் மிகவும் முக்கியமான பதவியில் இருந்து கொண்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகள் தொடர்பில் வெளிக் கொண்டுவருவதற்கு முடியாத நிலையில் மைத்திரிபால இருந்துள்ளாரா?அல்லது அடுத்த பிரமராக தனக்கு சந்தர்ப்பம் வழஙக்கப்படவில்லை என்ற கவலையில் இந்த முடிவை எடுத்துள்ளாரா? என்பதாகும்.தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர் என்ற அடிப்டையில் தான் வெற்றி பெரும் பட்சத்தில் தமது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை இல்லாமல் ஆக்கி,பிரதமராக ரணில் விக்கரம சிங்கவை நியமிக்க இருப்பதாகவும்,முழுமையான அனைத்து அதிகாரமும்,பாராளுமன்றத்துக்கு குறிப்பாக ஜக்கிய தேசிய கட்சியின் பிரதமருக்கு வழங்க போவதாக கூறியிருப்பது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மைத்திரிபால சிறசேன மீது இருந்து நம்பிக்கையினை இழக்கச் செய்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.

ரணில் விக்ரமசிங்க அவர்களை பொருத்த வரையில் சிறந்த அரசியல்வாதி ராஜதந்திர ரீதியில் எதையும் அனுகக் கூடியவர்.ஆனால் சர்வதேச நாடுகள் சிலவற்றின் மிகவும் நெருக்கத்திற்குரியவர் என்பதையும் மறந்துவிட முடியாது.சர்வதேசத்தில் உள்ள சில நாடுகளுக்கு தேவையானதொன்று இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்தும் இடவசதி,சமாதானத்துாதுவர்கள் என்ற பெயரில் இருக்கும் சர்வதேசத்தின் நபர்கள் இங்குவந்து இந்த நாட்டை பிரித்து எழுதிக்கொடுத்துவிட்டு செல்ல இன்றும் முற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் மைத்திரிபாலவின் வெற்றி அவர்களுக்கு பெரும் வசந்தமாக மாறலாம்.குறுகிய காலத்துக்குள் எமது நாடு கொண்டிருக்கும் அபிவிருத்திளும்,வளர்ச்சிகளும் மீ்ண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடப்படும் அத்திவாரம் என்பதை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் பின்னணி என்ன என்பதையும் இந்த பொதுக் கூட்டணி கட்சிகளுக்கு புரியாமல் உள்ளது என்பது உண்மை,எல்லோரதும் பொது எதிரி் மஹந்த ராஜபக்ஷ என்று பார்க்கும்  நிலையினை இந்த நாட்டில் தோற்றுவிப்பது தான்,அதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவினை தோற்கடடிக்க இலகுவாக பிராரத்துக்கு வசதியாக இருக்கும் என்ற கனவு என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது.யுத்தம் காலத்தில் செய்ய முடியாமல் போன இந்த அபிவிருத்திகளை இன்னும் 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செய்வார்கள்,அதற்கான அனுபவமும்,திறமையும் அவரிடம் இருக்கின்றது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.என்பது தான் யதார்த்தமாகும்.

எது எவ்வாறாக இருந்தாலும் ஆட்சி மாற்றம் தேவையென மக்கள் கருதினால் அதனை எந்த அரசியல் கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற உண்மையினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எடுக்கப்படுகின்ற முடிவுகளும்,எட்டப்படுகின்ற தீர்மாணங்களும் சரியாக அமையாத போதும்,அதில் சில உடன்பாடுகளை காண்பது தான் பொருத்தமானதாகும்.