நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் ஜனாதிபதி முறைமையை கொண்டு வருவதும் அரசியலமைப்பு திருத்தம் மூலம் 100 நாட்களுக்குள் சுதந்திரமான நீதி சேவை, ஊழல் மற்றும இலஞ்சம், பொலிஸ், தேர்தல்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் அமைப்பதும் இந்த நாட்டு மக்களுக்கான எனது வாக்குறுதிகளாகும் எனவும் அவர் கூறினார்.
இந்த வாக்குறுதிகளை நாடாளுமன்றம் மூலம் செய்ய முடியாது போயின், மக்களிடம் புதிய அனுமதி கோரும் வகையில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
நேர அவகாசம் மட்டுமட்டாக இருப்பதால், தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை வரையும் வேலைத்திட்டத்தை சட்ட வல்லநர் குழு தொடங்கிவிட்டது. நாட்டின் நலனுக்காக இரண்டு பிரதான கட்சிகள் இது முதல் தடலை அல்ல. '2006 ஒக்டோபரில் ஒரு பொது வேலைத்திட்டத்துக்காக நான்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் என்ற வகையில் ஐ.தே.க.வின்; மாலிக சமரவிக்ரமவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டேன்.
மறைந்த பிரதமர் எஸ்.டபில்யூ.ஆர்.கே. பண்டாரநாயக்க 1956இல் மஹாஜன எக்சத் பெரமுனவில் வேட்பாளராக போட்டியிட்டு வென்று பிரதமரானார்.
ஆவர் 1951இல் தான் தோற்றுவித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடவில்லை. ஆவர் தேர்தல் வின்னம கையாகவும் பல்வேறு கொள்கைகள் கொண்டவர்கள் பொது முன்னோடியாக இருந்தது.
இதையே நம் நாட்டு நலனை முன்னேற்றமடைவதற்காக செய்கின்றோம். ஏதிரணியின் பொதுவேட்பாளருக்கு தனது பூரண ஆதரவு கொடுத்ததன் மூலம் ஐ.தே.க சார்பில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க பெரும் தியாகம் செய்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.