Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, November 1, 2014

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்- 08 ஆம் திகதி


         

                                                          (பூமுதீன்)
கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அவசர அதியுயர் பீட கூட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு உயர்பீட உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அழைப்பு விடுத்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் பட்சத்தில் வேட்பாளராக களம் இறங்குவோரில் யாரை ஆதரிப்பது அவ்வாறு ஆதரவு வழங்க முடிவெடுக்கப்படும் நபரிடம் முஸ்லிம் சமுகம் நலன் சார்ந்த எவ்வாறான விடயங்களை முன்வைப்பது, தேசிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வடமாகாண முஸ்லிம்களின் அவசர மீள்குடியேற்றத்தில் எவ்வாறான நிபந்தனைகளை கோருவது தொடர்பிலும் இக்கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.