Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, April 26, 2014

ஆசிரியையை முழந்தாளிட வைத்த வழக்கு: சாட்சியமளிப்பு நிறைவு

நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியையை முழந்தாளிட வைத்தமை தொடர்பான வழக்கின் சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் துசிதா ஹேரத் என்ற ஆசிரியை முழந்தாளிட வைத்தார் என்று குற்றச்சாட்டின் பேரில் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு எதிராகவே வழக்கு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் சாட்சிப்பதிவுகள் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் நேற்று (24) நிறைவடைந்தது. இருத்தரப்புகளினதும் ஏழுத்து மூலமான தொகுப்புரைகளை இன்று(25) கையளிக்குமாறு நீதிபதி பணித்தார்.

இந்நிலையில் பிரதி அதிபரான டப்ளியு பி.விஜேரத்ன மற்றும் அவருடைய சாரதியான நலின் சுசந்த ஆகியோர் நேற்று சாட்சியமளித்தனர்.