வாஷிங்க்டன், -
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ தேசியப் பூங்காவில் வெள்ளை மணல் நினைவுச்சின்னம் உள்ளது. இதன் அருகே உள்ள ஹாலோமேன் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்ற QF-4 என்ற ஆளில்லா பயிற்சி விமானம், சிறிது நேரத்தில் வெள்ளை மணல் நினைவுச் சின்னத்தில் விழுந்து நொறுங்கியது.
இப்பயிற்சிக்காக நினைவுச்சின்னம் மூடி வைக்கப்பட்டிருந்தது. விபத்து ஏற்பட்டதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை நினைவுச் சின்னம் மூடப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விமான தளத்தில் இருந்து F-22 ரேப்டார், MQ-1 பிரிடேட்டார், MQ-9 ரீப்பர் ஆகிய விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகிலேயே மிகவும் நீளமான (50188 அடி) இந்த தளத்தில், வினாடிக்கு 10 ஆயிரம் அடி வேகத்தில் விமானங்களை இயக்கி சோதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment