வடக்கில்
மீண்டும் இன உறவுகள் தலைத்தோங்குகின்ற போது அவற்றை வேறறுத்து விட சில சக்திகள் செயற்படுவதை
ஒன்றுபட்டு தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார்
மாவட்டத்தின் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி தாருல் ஹிக்கம் மத்ரஸா திறப்பும்,மூத்த உலமாக்கள்
கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு
கூறினார்.
மத்ரஸாவின்
அதிபர் அஸ்ரப் முபாரக் றசாதி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட
ஆயர் ராயப்பூ ஜோசப்,புத்தளம் மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத்
ஆலிம்,உட்பட பெரும் எண்ணிக்கையிலான பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும்
அமைச்சர் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது –
மதங்கள்
ஒற்றுமையினையும்,புரிந்துணர்வினையுமே போதிக்கின்றது.மதத்தின் பெயரால் வேறொரு இனத்தை
மட்டம் தட்டவோ அல்லது அடக்கி ஆளுவதற்கோ எங்கும் கூறப்படவில்லை.துரதிஷ்டம் இன்று வடக்கு
வெளியே தென்பகுதியில் மதத்தை போதிக்கக் கூடியவர்கள் மதத் தளங்கள் மீது கண்ணம் வைக்கின்றது.
இவர்களுக்கு
எதிராக சட்டத்தை செய்வதில் கூட பொலீஸாருக்கு சிரமமாக வுள்ளது.இந்த நிலையில் எமக்குள்
காணப்படும் சிறிய சிறிய விடயங்களை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொருவரும்
மார்க்கத்தை பற்றி முழுமையாக கற்றுக் கொள்வதுடன்,சகோதர மதத் தவர்களின் கலாசார பண்புகளையும்
அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்றைய
இந்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் அதிகமான நேரத்தை ஒதுக்கியமை முக்கியத்துவமிக்கதாகும்.ஆயர்
அவர்கள் இம்மாவட்ட மக்களது தேவைகள் குறித்து குரல் எழுப்புகின்றார்.ஆதே போல் முஸ்லிம்
மக்களின் பிரச்சினை தொடர்பிலும் பேச வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுக்
கொண்டார்
No comments:
Post a Comment